[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் ஆளுநர் ஆட்சி அமைக்க மத்திய அரசுக்கு ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் பரிந்துரை என தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் பிடிபியுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க மாட்டோம் - குலாம் நபி ஆசாத், காங்கிரஸ்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீர் மாநில முதல்வர் பதவியை மெகபூபா முப்தி ராஜினாமா செய்ததாக தகவல்
  • BREAKING-NEWS ஜம்மு-காஷ்மீரில் மெஹபூபா முப்தி கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டது பாஜக
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு

ரஜினி நேரம் ஒதுக்கினால் சந்திப்பேன்: அழகிரி பேட்டி

mk-alagiri-met-dmk-leader-karunanidhi-and-said-asked-time-to-meet-rajini

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த மு.க.அழகிரி, ரஜினியை சந்திக்க நேரம் கேட்டுள்ளதாக கூறினார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தி.மு.க டெபாசிட் இழந்த நிலையில், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை மு.க.அழகிரி கடுமையாக விமர்சித்தார். ஸ்டாலின் இருக்கும் வரை கட்சி வெற்றி பெறாது என்று கூறினார். மு.க.அழகிரியின் கருத்துக்கு திமுக தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

        

இந்த நிலையில், சென்னை கோபாலபுரம் இல்லத்தில் கருணாநிதியை மு.க.அழகிரி இன்று சந்தித்தார். இந்தச் சந்திப்பு 30 நிமிடங்கள் நடந்தது. சந்திப்பின் போது கருணாநிதிக்கு அழகிரி புத்தாண்டு வாழ்த்து கூறினார். பின்னர் செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த அவர், திமுக தலைவர் கருணாநிதி நலமோடு இருப்பதாகத் தெரிவித்தார். 

மேலும் ரஜினியை சந்திப்பீர்களா? என்று  நிருபர்கள் எழுப்பியக் கேள்விக்குப் பதில் அளித்த அழகிரி, ‘‘ரஜினியைச் சந்திக்க நேரம் கேட்டிருக்கிறேன். ஆனால் நேரம் கிடைக்கவில்லை. நேரம் ஒதுக்கியதும் சந்திப்பேன்’’ என்றார். ஸ்டாலினை கடுமையாக விமர்சித்த நிலையில் இந்தச் சந்திப்பு நடைபெற்றுள்ளது திமுக மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close