[X] Close
JUST IN
  • BREAKING-NEWS எஸ்.வி.சேகர் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
  • BREAKING-NEWS தமிழகத்திற்கு நன்மை செய்யக்கூடிய இரட்டைக்குழல் துப்பாக்கி அதிமுக- பாஜக இல்லை - கனிமொழி
  • BREAKING-NEWS காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் திமுக, தோழமை கட்சிகள் சார்பில் மனித சங்கிலி போராட்டம்
  • BREAKING-NEWS ஊழலை ஒட்டுமொத்தமாக குத்தகை எடுத்தது திமுக அரசுதான்- அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS பொறியியல் படிப்புகளில் சேர விரும்புவோர் மே 3 முதல் மே. 30 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்
  • BREAKING-NEWS போர்க்களத்தில் நான் பின்வாங்கியதாக சரித்திரம் கிடையாது- வைகோ
  • BREAKING-NEWS காவிரி விவகாரத்தில் அதிமுக நடத்தியது பிரியாணி விரதம்- சீமான்

டிடிவி தினகரனால் எந்தத் தாக்கமும் ஏற்படாது: அமைச்சர் ஜெயக்குமார்

does-not-cause-any-impact-by-dtv-dinakaran-minister-jayakumar

டிடிவி தினகரன் சட்டப்பேரவைக்கு வருவதால், எந்தத் தாக்கமும் ஏற்படாது என மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், “ வீரமங்கை  வேலுநாச்சியார் பிறந்த நாள் விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் பாஸ்கரன் கலந்துக் கொள்கின்றனர். மேலும் இரண்டு சட்டமன்ற உறுப்பினர்கள் பிரபு மற்றும் பவுன்ராஜ் சபரிமலை சென்றுள்ளனர்.அதேபோன்று உடல்நலக்குறைவு காரணமாக எம்எல்ஏக்கள் சிவசுப்ரமணி, ஆறுக்குட்டி ஆகியோர் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை. வர இயலாமை குறித்து அவர்கள் கடிதம் அளித்துள்ளனர். இன்று நடைபெற்ற கூட்டத்தில் 104 எம்எல்ஏக்கள் பங்கேற்றுள்ளனர்” என்றார்.

மேலும் பேசிய அவர், டிடிவி தினகரன் சட்டப்பேரவைக்கு வருவதால், எந்தத் தாக்கமும் ஏற்படாது என்றார். மு.க.ஸ்டாலினோ, தினகரனோ நினைத்தால் கூட ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்றும், அதற்கு முகாந்திரம் இல்லை எனவும் தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் முடிந்த வரையில் ஒற்றுமையுடன் இருந்து, அதிமுக அரசை முழுமையுடன் வழி நடத்தி செல்வதாகவும் அவர் கூறினார்.  

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close