[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மக்களவையில் குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவின் நகலை இந்திய மஜ்லிஸ்-ஈ-இத்ஹதுல் முஸ்லிமன் கட்சி தலைவர் அசாதுதீன் ஓவைசி கிழித்ததால் பரபரப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவுக்கு தேசியவாத காங்கிரஸ், தெலங்கானா ராஷ்டிர சமிதி, பகுஜன் சமாஜ், சமாஜ்வாடி கட்சிகள் எதிர்ப்பு
  • BREAKING-NEWS குடியுரிமை திருத்த மசோதாவில் இலங்கை சிறுபான்மையினரையும் சேருங்கள் - பிரசன்னா ஆச்சார்யா, பிஜூ ஜனதாதளம் எம்.பி
  • BREAKING-NEWS குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரும் மசோதாவிற்கு தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி எதிர்ப்பு
  • BREAKING-NEWS 2009 மக்களவை தேர்தல் வெற்றிக்கு எதிரான வழக்கு: ப.சிதம்பரம் ஆஜராக மேலும் ஒரு மாதம் அவகாசம்
  • BREAKING-NEWS நித்யானந்தா எங்கிருக்கிறார்? - டிச. 12க்குள் கர்நாடக அரசு மற்றும் காவல்துறை அறிக்கை அளிக்க அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS மக்களவையில் ஆயுதச் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது

உள்ளாட்சி தேர்தலுக்கு ஆயத்தமாகுங்கள்: எம்.எல்.ஏ.களுக்கு ஓபிஎஸ் அறிவுரை

get-ready-for-local-elections-obs-advice-for-mlas

உள்ளாட்சி தேர்தலை எதிர்கொள்ள தயாராகுமாறு அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்று அக்கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைபாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்தக்கூட்டம் நடைப்பெற்றது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம் ஏப்ரல் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற வாய்ப்பிருப்பதால் அதனை எதிர்கொள்ள தயாராகுமாறு அதிமுக எம்.எல்.ஏ.க்களிடம் தெரிவித்தார். முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவிருந்த நிலையில் திமுக வழக்கு தொடர்ந்ததை அடுத்து உயர்நீதிமன்றம் தேர்தலை ரத்து செய்தது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close