[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 62ஆவது படத்தின் பூஜை நாளை நடைபெறுகிறது
  • BREAKING-NEWS நான் இந்துக்களுக்கு எதிரானவன் அல்ல; மோடிக்கு எதிரானவன்: பிரகாஷ் ராஜ்
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்துவுக்கு ஆதரவாக ரஜினி இருந்திருக்க வேண்டும் - சீமான்
  • BREAKING-NEWS வைரமுத்துவை காரணம் காட்டி தமிழகத்திற்குள் கொல்லைப்புறமாக வர நினைத்தால் வர முடியாது - பாரதிராஜா
  • BREAKING-NEWS ஹெச். ராஜாவும், தமிழிசையும் இணைந்து மெர்சல் படத்தை சூப்பர் ஹிட் ஆக்கிவிட்டனர்- நடிகர் விஷால்
  • BREAKING-NEWS நடிகர் கமல், ரஜினி, விஷால் ஆகிய மூவரும் இணைந்து தேர்தலை சந்திக்க வேண்டும் - பிரகாஷ்ராஜ்
  • BREAKING-NEWS ஆண்டாள் சர்ச்சை தேவையற்றது- ஓ. பன்னீர் செல்வம்
  • BREAKING-NEWS ஒகி புயலால் காணாமல்போன மீனவர்களை தேடும்பணி நிறுத்தப்பட்டுள்ளது- அமைச்சர் நிர்மலா சீதாராமன்
  • BREAKING-NEWS வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி ஜன.31 இல் கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை
  • BREAKING-NEWS நாகலாந்து, மேகாலாயா மாநிலங்களில் பிப்-27 ஆம் தேதியும், திரிபுரா மாநிலத்தில் பிப்-18 ஆம் தேதியும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும்- தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS ஜெ.சிகிச்சையின்போது உடன் இருந்த சசிகலாவுக்குத் தான் அனைத்து உண்மைகளும் தெரியும்- வைகோ
  • BREAKING-NEWS சிவகாசியில் பட்டாசு உற்பத்தியாளர்கள் தொடர்ந்து 24வது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம்
  • BREAKING-NEWS டெல்லியில் இன்று காலை 10 மணிக்கு நடைபெறும் பட்ஜெட்டுக்கு முந்தைய கூட்டத்தில் ஓபிஎஸ் பங்கேற்கிறார்
  • BREAKING-NEWS கவிஞர் வைரமுத்து மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தி 2வது நாளாக ஸ்ரீவில்லிபுத்தூரில் தொடர் உண்ணாவிரத போராட்டம்
அரசியல் 03 Jan, 2018 12:13 PM

‌பட்டாசு தொழிலை காக்க வலியுறுத்தி சிவகாசியில் வலுக்கிறது போராட்டம்

firework-workers-continuous-strike

சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதியிலிருந்து விலக்கு கோரி 9வது நாளாக பட்டாசு ஆலைகளின் வேலைநிறுத்தம் தொடர்கிறது. பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது.

பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் மாசு ஏற்படுவதாக கூறி பட்டாசு வெடிக்க இந்தியா முழுவதும் தடை விதிக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு வரும் 5 ஆம் தேதி விசாரணைக்கு வர உள்ள நிலையில் பட்டாசுக்கு தடை விதிக்கப்படும் என்ற அச்சத்தில் வெளி மாநில பட்டாசு விற்பனையாளர்கள் ஆர்டர்களை நிறுத்திவிட்டனர். இதனால், பட்டாசு தொழில் தானாகவே முடங்கி உள்ளது.

இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி முதல் பட்டாசு ஆலைகளை மூடி காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். அவர்களின் வேலைநிறுத்தம் 9வது நாளாக இன்றும் தொடர்கிறது. இந்நிலையில் பட்டாசு உற்பத்தியாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் அனைத்து கட்சி சார்பில் கடையடைப்பு போராட்டம் தொடங்கியுள்ளது. 10-க்கும் அதிகமான வணிகர் சங்கங்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.

மேலும் காய்கறி மார்க்கெட் வியாபாரிகள், வணிகர்கள், அச்சக உரிமையாளர்கள், லாரி, ஆட்டோ ஓட்டுநர்களும் இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே பட்டாசு தொழிலை விட்டால் தங்களுக்கு வேறு ஏதும் வாழ்வாதாரம் இல்லை எனக்கூறி பட்டாசு தொழிலாளர்களும் சிவகாசியில் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். சிவகாசி காமராஜர் சிலையிலிருந்து பட்டாசு தொழிலாளர்கள் இந்த பேரணியை தொடங்கியுள்ளனர். சுமார் 2,000 தொழிலாளர்கள் இந்த பேரணியில் ஈடுபட்டுள்ளனர். சுமார் 3 கி.மீ தூரம் வரை பேரணியாக சென்று கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடவும் பட்டாசு தொழிலாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close