[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ரஜினிகாந்தை சூப்பர் ஸ்டார் என்றுதான் சொன்னேன், சூப்பர் அரசியல்வாதி என்று சொல்லவில்லை: இயக்குநர் பாரதிராஜா
  • BREAKING-NEWS காவிரி வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பை மத்திய அரசு நிறைவேற்றக்கோரி அதிமுக சார்பில் பொதுக்கூட்டம்
  • BREAKING-NEWS மதுரை காமராசர் பல்கலைக்கழக துணைவேந்தர், பதிவாளர் அறைகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை
  • BREAKING-NEWS டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு பணியிடங்களுக்கான 2ஆம் கட்ட கலந்தாய்வு ஏப்.25ல் நடைபெறுகிறது: தேர்வாணையம்
  • BREAKING-NEWS 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்தால் தூக்கு தண்டனை
  • BREAKING-NEWS பேராசிரியை நிர்மலாதேவி விவகாரத்தில் அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரியில் புகார் கூறிய 4 மாணவிகளிடம் விசாரணை
  • BREAKING-NEWS தமிழக மக்களின் உரிமைகளை நசுக்கும் அரசாக மத்திய அரசு உள்ளது- கனிமொழி

மிகப்பெரிய புரட்சிகள் தமிழகத்தில்தான் தொடங்குகிறது: ரஜினி பேச்சு

actpr-rajini-kanth-meets-with-press-people-in-chennai-egmore

மிகப்பெரிய புரட்சிகள் எல்லாம் தமிழகத்தில் இருந்துதான் தொடங்குகிறது என்று நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளர்.

சென்னை எழும்பூரில் பத்திரிகையாளர்கள் உடனான பிரத்யேக சந்திப்பில் ரஜினிகாந்த் இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், “அரசியல் குறித்த அறிவிப்பை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த ஊடகங்களுக்கு நன்றி. ஊடகங்களை எவ்வாறு கையாள்வது என்று எனக்கு தெரியவில்லை. தவறு ஏதும் செய்திருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். நானும் இரண்டு மாதங்கள் பத்திரிக்கை துறையில் பிழை திருத்தும் ஆசிரியராக பணி செய்துள்ளேன். நான் முதன் முதலில் பொம்மை பத்திரிக்கைக்குதான் பேட்டி அளித்தேன். நம் எல்லோருக்கும் ஒரு கடமை உள்ளது. என்னுடைய அரசியல் வருகைக்கு பத்திரிக்கையாளர்களின் உதவி தேவை” என்றார்.

கட்சி கொடி தயாரிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது என்று தெரிவித்த ரஜினி, கட்சிக் கொடியை அறிமுகம் செய்யும்போது பத்திரிகையாளர் சந்திப்பு இருக்கும் என்று கூறினார். இந்த சந்திப்பின் போது அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை என்று கூறப்படுகிறது. முன்னதாக போயஸ் கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “உண்மையான, நேர்மையான, நாணயமான, சாதி, மத சார்பற்ற அறவழி அரசியலே ஆன்மீக அரசியல்” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close