[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பேருந்து கட்டணத்தை உயர்த்தியது தமிழக அரசு; நாளை முதல் அமலுக்கு வருகிறது
  • BREAKING-NEWS மூத்த குடிமக்கள், 8 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பாஸ்போர்ட் கட்டணம் 10% குறைக்கப்படும் - சுஷ்மா ஸ்வராஜ்
  • BREAKING-NEWS டெல்லியில் சுஷ்மா ஸ்வராஜை புரட்சித்தலைவி அம்மா என்று அழைத்து மகிழ்வேன் - புதுச்சேரி முதலமைச்சர்
  • BREAKING-NEWS பெண்களுக்கான அம்மா இருசக்கர வாகன திட்டத்தில் வாகனம் பெறுவதற்கு விண்ணப்பிக்க ஆதார் அவசியம் - அரசு
  • BREAKING-NEWS மாணவர் சரத்பிரபுவின் இறப்புக்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்
  • BREAKING-NEWS மத்திய அரசின் ஸ்மார்ட் சிட்டி பட்டியலில் ஈரோடு சேர்ப்பு
  • BREAKING-NEWS ஆண்டாள் விவகாரத்தில் கவிஞர் வைரமுத்து மீதான வழக்குகளை விசாரிக்க இடைக்காலத்தடை - உயர்நீதிமன்றம்
அரசியல் 31 Dec, 2017 10:42 AM

ரஜினி இன்னும் முழுமையாக அரசியலுக்கு வரவில்லை: முத்தரசன்

rajini-has-not-yet-come-to-politics-completely-muthrasaran

ரஜினிகாந்த் தற்போது நடந்து வரும் ஆட்சி குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

புதியதலைமுறையிடம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் பேசுகையில், ரஜினிகாந்த் தற்போது நடந்து வரும் ஆட்சி குறித்து மறைமுகமாக விமர்சித்துள்ளார். மன்றங்களை ஒருங்கிணைப்பதற்காவே ரசிகர்களிடம் ரஜினி தெரிவித்துள்ளார். அது தொடர்பான அறிவிப்பாகத்தான் இருக்கிறது. சட்டமன்ற தேர்தல் அறிவித்தபிறகு கட்சி பற்றி அறிவிப்பதாக தான் ரஜினி கூறியிருக்கிறார். இதனை பார்க்கும் போது இன்னும் முழுமையான அரசியலுக்குள் ரஜினி வரவில்லை என்று தெரியவருகிறது. 

 

மேலும் பேசுகையில் கட்சி, கொள்கை குறித்து எதுவும் அவர் கூறவில்லை. அதனை அறிவித்தபிறகு இந்திய கம்யூனிஸ்டு கட்சி தங்களதுநிலைப்பாட்டை தெரிவிக்கும். தற்போது ஆட்சி குறித்து ரஜினி கருத்து தெரிவித்து இருப்பது வரவேற்கதக்கது.மாநில அரசின் அதிகாரத்தை பறிக்கும் செயல் நடந்து வருவது குறித்து பல்வேறு கட்சியினர் கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதனை பலம் சேர்க்கும் வகையில் ரஜினிகாந்த் கருத்து ஆட்சி பற்றியதாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close