[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.67.97 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்

நான் அரசியலுக்கு வருவது உறுதி - ரஜினிகாந்த்

my-political-entry-is-definite-rajinikanth

அரசியலுக்கு வருவது உறுதி இது காலத்தின் கட்டாயம் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் கடந்த 26 ஆம் தேதி முதல் ரசிகர்களை சந்தித்து வருகிறார். இந்தச் சந்திப்பு இன்றுடன் முடிவடைகிறது. கடந்த முறை ரசிகர்களுடனான சந்திப்பின் தொடக்க விழாவில் இயக்குனர் முத்துராமனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார். இந்த சந்திப்பின்போது இயக்குனர் மகேந்திரன், தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோர் வந்திருந்தனர்.

அப்போது ரசிகர்களிடையே பேசிய அவர், ’என் அரசியல் அறிவிப்பு குறித்து அனைவரும் ஆர்வம் காட்டி வருகின்றனர். நான் அரசியலில் வருவதில் மக்களை விட ஊடகங்களுக்குதான் ஆர்வம் அதிகம். வரும் 31-ம் தேதி என் அரசியல் நிலைப்பாட்டை அறிவிக்கிறேன்’ என்றார். அவர் அரசியலுக்கு வரவேண்டும் என்று அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். அது தொடர்பாக போஸ்டர்கள் அடித்து ஒட்டியுள்ளனர். அவர் அரசியலுக்கு வருவார் என்று தமிழருவி மணியன் நம்பிக்கையுடன் கூறி வருகிறார். அவர் இன்று என்ன அறிவிப்பார் என்று தமிழகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.இந்நிலையில், அவர் பேசும் போது, நான் அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயம்.நாடாளுமன்ற  தேர்தல் சமயத்தில் முடிவெடுப்பேன். அரசியலுக்கு பணத்திற்காகவோ ,பெயருக்கோ, புகழுக்கோ  வரவில்லை எனக்கூறினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close