[X] Close
JUST IN
  • BREAKING-NEWS என் மீது புகார் அளித்தவர்கள் மீது பரிதாபம் வருகிறது; சிலர் பின்னால் இருந்து இயக்குகிறார்கள் - பொன்.மாணிக்கவேல்
  • BREAKING-NEWS பெரியகுளம் நகர மன்ற முன்னாள் தலைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்சின் சகோதரருமான ஓ.ராஜா அதிமுகவில் இருந்து நீக்கம் - ஓபிஎஸ்-ஈபிஎஸ்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதித்த தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவுக்கு எதிராக முறையீடு
  • BREAKING-NEWS ஜிசாட்-7ஏ செயற்கைக்கோளுடன் ஜிஎஸ்எல்வி எஃப்11 ராக்கெட்டை இன்று விண்ணில் செலுத்துகிறது இஸ்ரோ
  • BREAKING-NEWS தமிழகம் முழுவதும் சாலைகளில் இடையூறு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் வைக்க உயர்நீதிமன்றம் தடை
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.73.29 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS ஊடகங்களிடம் பேச அஞ்சும் பிரதமராக நான் இருக்கவில்லை; ஒவ்வொரு வெளிநாட்டு பயணம் முடிந்ததும் பத்திரிகையாளர் சந்திப்பு நடத்தியிருக்கிறேன் - முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

சினிமா, அரசியலுக்கு வரவேண்டாம்: ரஜினியை கண்கலங்க வைத்த ரசிகரின் கடிதம்..!

rajinikanth-speech-before-fans

“ நீங்கள் நடிக்க வரவேண்டாம். அரசியலுக்கும் வரவேண்டாம். ஆனால் உயிரோடு வந்தால் போதும்” என சிங்கப்பூரில் சிகிச்சை பெற்றபோது ரசிகர் ஒருவர் கடிதம் எழுதியிருந்தது தன்னை கண்கலங்க வைத்ததாக ரஜினி கூறினார்.

நடிகர் ரஜினிகாந்த் இரண்டாவது கட்டமாக தனது ரசிகர்களை கடந்து 26ம் தேதி முதல் சந்தித்து வருகிறார். ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளும் நோக்கில் நடைபெறும் இந்தச் சந்திப்பு, நாளை வரை நடைபெறவுள்ளது. தனது அரசியல் நிலைப்பாடு பற்றி நாளை தெரிவிக்க உள்ளதாக ஏற்கனவே ரஜினி தெரிவித்திருந்தார்.

இதனிடையே ராகவேந்திரா மண்டபத்தில் ரசிகர்களுடன் ரஜினி இன்றும் புகைப்படம் எடுத்து வருகிறார். இதற்கு முன் ரசிகர்கள் மத்தியில் பேசிய ரஜினி, “ 1960களில் மதராஸ் குறித்து கர்நாடகாவில் பெருமையாக பேசிக்கொள்வார்கள்.1973ல் முதன் முறையாக நான் சென்னை வந்ததேன். எனக்குள் இருந்த நடிப்பு திறமையை முதன் முதலில் கண்டுபிடித்தவர் எனது நண்பன் ராஜ்பகதூர். சென்னையில் பாலச்சந்தரை முதலில் சந்திக்கும்போது, நடித்து காமி என்றார். நான் நடித்தும் திட்டப்போகிறார் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த சமயத்தில் மூன்று படத்தில் உன்னை புக் செய்ய போகிறேன். நீ ஒன்று மட்டும் செய்ய வேண்டும். தமிழ் மட்டும் கற்றுக்கொள். உன்னை எங்கு கொண்டு உட்கார வைக்கப்போகிறான் பார் என்று சொன்னார். என்னை குழந்தைபோன்று பார்த்து கொண்டார். அதன்பின் பஞ்சு அருணாச்சலம், வாசு முத்துராமன், ராஜ்சேகர் ஆகியோர் என்னை ஸ்டார் ஆக்கினார்கள். சுரேஷ் கிருஷ்ணா, மணிரத்னம் என்னை சூப்பர் ஸ்டார் ஆக்கினார்கள்” என்றார்.

மேலும் பேசிய ரஜினி, “ அதன்பி இந்தியாவிலேயே என்னை தெரியும் அளவிற்கு 2.0 மூலம் என்னை உயர்த்தியர் ஷங்கர். இனிமேல் 2.0 போன்று படம் வருமா என்பது சந்தேகம். அந்தளவிற்கு படத்தில் கண்டென்ட் உள்ளது. படத்தில் சில தொழில்நுட்ப வேளைகள் இருப்பதால் ஏப்ரல் 14-க்கு ரீலிஸ் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. காலாவில் ரஞ்சித் என்னை சிறப்பாக காமித்துள்ளார். அந்த கேரக்டர் எனக்கே ரொம்ப பிடித்திருந்தது. எனக்கு உடம்பு சரியில்லாமல் இருந்தபோது எனது உயிரை திரும்ப கொண்டுவந்தவர்கள் நீங்கள் தான். நீங்கள் செய்த பிரார்த்தனை எல்லாம் பார்த்தபோது, எனக்கே பிரமிப்பாக இருந்தது. அந்த சமயத்தில் ஒரு ரசிகர் எழுதிய கடிதம் என்னை மிகவும் கண்கலங்க வைத்தது. கடிதத்தில் சினிமாவுக்கு வரவேண்டாம். அரசியலுக்கு வரவேண்டாம். உயிரோடு வந்தால் போதும் என கூறியிருந்தார். அதனை படிக்கும்போது கண்கள் கலங்கியது. கனவில் இருக்கும் சந்தோஷம் நனவாகும்போது இருக்காது. அதற்காக கனவு காணக்கூடாது என்றில்லை. கனவு காண வேண்டும். அதனை நியாயமான முறையில் அடைய வேண்டும். அப்போது கிடைக்கவில்லையென்றால் கூட பரவாயில்லை. நீ தனியாக இருக்கும்போது உன்னையே நீ மதிக்கணும். உடம்புக்கு எப்படியோ மெடிசன் தேவையோ அதனைபோல மனதிற்கு மெடிட்டேசன் முக்கியம்” என ரஜினி பேசினார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close