[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் விவகாரத்தில் பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்வேன் - வைகோ
  • BREAKING-NEWS ரஃபேல் போர் விமான ஒப்பந்த விவகாரத்தில் உண்மை வெற்றி பெற்றுள்ளது - மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி
  • BREAKING-NEWS ராஜஸ்தான் முதலமைச்சராக அசோக் கெலாட் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS அணைகள் பாதுகாப்பு சட்ட மசோதாவை மத்திய நீர்வளத்துறை உடனே திரும்பப்பெற வேண்டும் - பிரதமருக்கு எழுதிய கடிதத்தில் முதல்வர் பழனிசாமி தகவல்
  • BREAKING-NEWS அந்நிய செலாவணி மோசடி வழக்கில் சசிகலா மீது வரும் 20ம் தேதி குற்றச்சாட்டு பதிவு நடைபெறும் - எழும்பூர் நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.72.94 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.68.18 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் வழக்கில் பொன் மாணிக்கவேல் பதவி நீட்டிப்புக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

புரட்சிகரமான நடவடிக்கை எடுத்த எனக்கு கிரிமினல் முத்திரை: ஆ.ராசா

people-have-clearly-understood-the-2g-case-verdict-a-raja

சாமானிய மக்களின் நலன் கருதி புரட்சிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும் தன்னை கிரிமினல் என முத்திரை குத்தியதாக முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இன்று சாமானிய மனிதர்களும் சர்வசாதாரணமாக ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற வசதிகளை பயன்படுத்துகின்றனர் என்றால் அதற்கு தானும், திமுகவும்தான் காரணம் என ஆ.ராசா குறிப்பிட்டார். புதிய நிறுவனங்களை செல்ஃபோன் சேவையில் அனுமதிக்கும் தனது முடிவால் அவ்வசதியை பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகரித்ததாகவும், அப்போதைய குடியரசுத் தலைவரே தனது உரையில் இதை சுட்டிக்காட்டியிருந்ததாகவும் ஆ.ராசா தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

தேர்தல்களில் திமுகவுக்கு பின்னடைவு ஏற்பட 2ஜி வழக்கும் ஒரு காரணமாகிவிட்டது என்றும் அவர் பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். தற்போது வந்துள்ள தீர்ப்பை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வோம் என்றும் ஆ.ராசா தெரிவித்தார். அலைக்கற்றை ஒதுக்கீடு விவகாரத்தில் நடைபெற்ற மேலும் பல நிகழ்வுகளை தான் புத்தகமாக எழுதி வருவதாகவும், அப்புத்தகம் சில வாரங்களில் வெளியிடப்படும் என்றும் ஆ.ராசா தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close