[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அஜித் சிறந்த நடிகர், அரசியல் குறித்த அவரது கருத்துக்கு நன்றி; அரசியலில் ஈடுபட மாட்டேன் என அஜித் முடிவு எடுத்திருப்பது நல்ல முடிவு - கனிமொழி எம்.பி.
  • BREAKING-NEWS நேரடியாகவோ மறைமுகமாகவோ அரசியலில் ஈடுபடும் ஆர்வம் இல்லை - நடிகர் அஜித்குமார்
  • BREAKING-NEWS நாடாளுமன்ற தேர்தல் பரப்புரைக்காக தமிழகம் வருகிறார் ராகுல் காந்தி; யார் பிரதமராக வர வேண்டும் என மக்கள் முடிவு செய்துவிட்டனர் - காங்கிரஸ் பொதுச்செயலாளர் முகுல் வாஸ்னிக்
  • BREAKING-NEWS மதுரையில் பேட்ட, விஸ்வாசம் திரையிடப்பட்டதில் ஜனவரி 10-17 வரையிலான வசூல் விவரங்களை அளிக்க ஆட்சியருக்கு உயர்நீதிமன்றக்கிளை உத்தரவு
  • BREAKING-NEWS ஸ்டாலினுக்கு துணிவு இருந்தால் கொல்கத்தா மேடையில் பிரதமர் வேட்பாளரை அறிவித்திருக்க வேண்டும் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வளர்ச்சி நிதி, புயல் நிவாரண நிதியை கேட்டும் தராத மத்திய அரசுடன் இணக்கம் என எப்படி கூற முடியும்? - தம்பிதுரை எம்.பி.
  • BREAKING-NEWS சிலைக்கடத்தல் தடுப்பு வழக்குகளில் பிறப்பிக்கும் உத்தரவுகளை நிறைவேற்றாமல், தடுப்பது எது? - அரசு, காவல்துறைக்கு நீதிமன்றம் கேள்வி

லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிப்பு

ranchis-special-cbi-court-pronounces-verdict-lalu-prasad-yadav-found-guilty-in-fodder-scam-verdict

கால்நடைத் தீவன ஊழல் வழக்கு ஒன்றில் ராஷ்டிரிய ஜனதா தளக் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

லாலு பிரசாத் யாதவ், Ranchi's Special CBI Court  pronounces verdict Lalu Prasad Yadav found guilty in #FodderScamVerdict1990 முதல் 1995 வரையிலான காலத்தில் பீகார் முதலமைச்சராக இருந்த போது கால்நடைக்கு தீவனம் வாங்குவதில் முறைகேடு நடைபெற்றதாக புகார் எழுந்தது. 1996-ம் ஆண்டு ஜனவரியில் கால்நடைத்துறை துணை ஆணையர் அமித் கார்ரே நடத்திய சோதனையிலேயே இந்த முறைகேடு தெரியவந்தது. இதையடுத்து நீதிமன்ற உத்தரவுபடி 1996-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியது. இந்த ஊழல் தொடர்பாக மொத்தம் 63 வழக்குகளை பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தியது.

 அதில் சாய்பாசா, தியோஹர் மாவட்டங்களின் அரசுக் கருவூலத்தில் முறைகேடு செய்தது உள்ளிட்ட 5 வழக்குகள் லாலு பிரசாத் மீது மட்டும் பதியப்பட்டன. இதில் சாய்பாசா மாவட்ட கருவூலத்தில் இருந்து 37 கோடியே 70 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் 2013-ம் ஆண்டு லாலுவை குற்றவாளி என அறிவித்தது. 

5 ஆண்டு சிறை தண்டனையும், 25 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்தது. இதனால், மக்களவை உறுப்பினர் பதவியை அவர் இழக்க நேர்ந்தது. தேர்தலில் போட்டியிட முடியாத நிலையும் ஏற்பட்டது.  இதைத்தொடர்ந்து மற்ற 4 வழக்குகளின் விசாரணை தொடர்ந்து கொண்டே இருந்தன. 

அதில், 1991 முதல் 1994 வரை தியோஹர் மாவட்ட அரசு கருவூலத்தில் இருந்து 89 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணையில் இன்று தீர்ப்பு அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கபட்டு இருந்தது. இதனையடுத்து, ராஞ்சி சிபிஐ நீதிமன்றம் முன்பு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 

இந்நிலையில், லாலு பிரசாத் உள்ளிட்ட 15 பேரை நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்துள்ளது. மொத்தம் 22 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது. இதில் பீகார் முன்னாள் முதலமைச்சர் ஜகன்நாத் மிஸ்ரா உள்ளிட்ட 7 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர். குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டவர்களின் தண்டனை விவரம் ஜனவரி 3-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து லாலு உடனடியாக சிறைக்கு செல்ல வேண்டியுள்ளது.

கால்நடை தீவன ஊழல் விவகாரத்தில் லாலு பிரசாத் மீது பதிவு செய்யப்பட்ட 5 வழக்குகளில் இதுவரை இரண்டு வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மூன்று வழக்குகளின் விசாரணை நடைபெற்று வருகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close