[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

2019-ல் ஸ்டாலின் தமிழக முதல்வர் ஆவார்: குஷ்பு பேச்சு

stalin-is-the-chief-minister-of-tamil-nadu-in-2019-khushboo

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விரைவில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்றும், ராகுல் காந்தி 2019ல் பிரதமராக பதவியேற்பார் என்றும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் குஷ்பூ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சென்னை வேலப்பன்சாவடியில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் பிறந்தநாள் விழா நடைப்பெற்றது. இதில்  திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நீண்ட இடைவேளைக்குப் பிறகு, ப.சிதம்பரம், வைகோ ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்திருந்தனர். அப்போது பேசிய குஷ்பூ, டிஜிட்டல் இந்தியாவுக்கு வித்திட்டதே 2ஜி தான் என தெரிவித்தார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் காங்கிரஸ் மற்றும் திமுக மீது சுமத்தப்பட்ட வீண்பழி தற்போது நீங்கியுள்ளதாகவும் குஷ்பூ கூறினார்.

திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விரைவில் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றார் என்றும், ராகுல் காந்தி 2019ல் பிரதமராக பதவியேற்பார் என்றும் அவர் பேசினார்.
 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close