[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் மைக்ரோசாஃப்ட் இணை-நிறுவனர் பில்கேட்ஸ், பிரதமர் நரேந்திர மோடியுடன் சந்திப்பு
  • BREAKING-NEWS போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும் - உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் சென்னையை தனித்தொகுதியாக அறிவிக்க வேண்டும் – சீமான்
  • BREAKING-NEWS அதிசயம், அதிர்ஷ்டத்தை நம்புகிறவர் ரஜினி - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் பேருந்து - லாரி மோதி விபத்து: 14 பேர் உயிரிழப்பு
  • BREAKING-NEWS இலங்கையின் அதிபராக பதவியேற்றார் கோத்தபய ராஜபக்ச
  • BREAKING-NEWS டிசம்பர் 2-ல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பாணை: மாநில தேர்தல் ஆணையம் தகவல்

ரஜினிகாந்துடன் தமிழருவி மணியன் சந்திப்பு

tamizharuvi-maniyan-meet-rajinikanth

நடிகர் ரஜினிகாந்த்தை காந்திய மக்கள் இயக்க தலைவர் தமிழருவி மணியன் சந்தித்து பேசினார். 

வரும் 26ம் தேதி முதல் ‌ரஜினிகாந்த் ரசிகர்களை மீண்டும் சந்திக்க உள்ள நிலையில், இன்று தமிழருவி மணியன் அவரை சந்தித்திருக்கிறார். சென்னை போயஸ் கார்டனில் உள்ள இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. அப்போது, அரசியல் பிரவேசம் குறித்து ரஜினியுடன் தமிழருவி மணியன் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனிடையே வரும் 31ம் தேதி அரசியல் பிரவேசம் பற்றி ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பை வெளியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன?

கடந்த முறை ரஜினி ரசிகர்ளை சந்தித்தபோது தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்ததுடன், போர் வரும் போது தயாராக இருங்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் மீண்டும் ரசிகர்களை சந்திக்கிறார். இதுதொடர்பான அறிவிப்பு வெளியான அன்று, புதிய தலைமுறையிடம் பேசிய தமிழருவி மணியன் இந்த முறை தனது அரசியல் வருகையை கட்டாயம் ரஜினி அறிவிப்பதாக கூறியிருந்தார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close