[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உதவும் வகையில் காவல் ஆய்வாளரை நியமிக்க அரசு ஒப்புதல்
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் ஏற்கனவே அறிவித்தபடி நாளை காலை 10 மணிக்கு கூடுகிறது
  • BREAKING-NEWS இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதித்தது இலங்கை உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கூவம், அடையாறு ஆற்றை பராமரிப்பு செய்யாத வழக்கில் அரசுக்கு விதித்த ரூ.2 கோடி அபராதத்துக்கு தடை
  • BREAKING-NEWS வைகை அணையில் இருந்து பாசனத்திற்காக நவ.23ம் தேதி முதல் 24ம் தேதிவரை தண்ணீர் திறக்க முதல்வர் உத்தரவு
  • BREAKING-NEWS சபரிமலையில் அனைத்து வயது பெண்களை அனுமதிக்கும் வழக்கை மீண்டும் விசாரிக்க உச்சநீதிமன்றம் முடிவு
  • BREAKING-NEWS நவ.15ம் தேதி பிற்பகல் பாம்பன் - கடலூர் இடையே கஜா புயல் கரையை கடக்கும் - சென்னை வானிலை ஆய்வு மையம்

பாசத்தால் வீடியோவை வெளியிட்டுவிட்டார் வெற்றிவேல்:டிடிவி தினகரன்

dhinakaran-on-video-footage-of-jayalalithaa-in-hospital-by-vetrivel-releases

சசிகலா மீதான களங்கத்தைப் போக்க அவர் மீதான பாசத்தால் வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டுவிட்டார் என்று தினகரன் கூறியுள்ளார். 

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக தினகரன் போட்டியிட்டுள்ளார். இன்று வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பான வீடியோவை தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் நேற்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். தினகரன் வேட்பாளர் என்பதால் ஜெயலலிதா வீடியோ குறித்து பேசக்கூடாது என்பது விதி. இதனால் இன்று மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவுக்கு பின்னர் தினகரன் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிப்பார் என்று கூறப்பட்டது. 

ஜெயலலிதா சிகிச்சை வீடியோ தொடர்பாக வாக்குப்பதிவுக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் தினகரன் பேசுகையில், “ஜெயலலிதா மறைவுக்கு பிறகு சசிகலா மீது களங்கத்தை ஏற்படுத்த முயன்றனர். ஏதோ ஒரு காலத்தில் அந்த வீடியோ தேவைப்படும் என்பதால் அதனை கேட்டுப் பெற்றேன். ஜெயலலிதா சிகிச்சை வீடியோ என்னிடம் உள்ளது குறித்து அமைச்சர்களுக்கும் தெரியும். ஜெயலலிதா வீடியோவை வெளியிட வேண்டும் என நான் நினைக்கவே இல்லை. அம்மா நைட்டியில் இருக்கும் வீடியோவை வெற்றிவேல் வெளியிட்டது எனக்கு வருத்தம். தொலைக்காட்சிகளில் பார்த்த பின்புதான் எனக்கு தெரிய வந்தது. யார் நம்புகிறார்களோ இல்லையோ எனக்கு தெரியாமலேயே வீடியோ வெளியிடப்பட்டது. ஆயிரம் சதவீதம் எனது கவனத்திற்கு வராமலேயே வீடியோ வெளியிடப்பட்டது என்பது தான் உண்மை. 

வீடியோவை வெளியிட வேண்டும் என்று நினைத்திருந்தால் தேர்தல் ஆணையத்திடம் அனுமதி பெற்று பிரச்சாரத்தின் போதே வெளியிட்டிருக்க முடியும். நீண்ட காலமாக வீடியோவை வெளியிட வேண்டும் என்று நிர்வாகிகள் கேட்டு வந்தனர். வீடியோவை வெளியிட்டுதான் வாக்குபெற வேண்டும் என விரும்பவில்லை. என்னுடைய தூண்டுதலால் வீடியோ வெளியிடப்பட்டதாக குற்றச்சாட்டு வரும் என முன்னரே கூறினேன்.

ஜெயலலிதா மறைவின் போது வெற்றிவேல் சிகிச்சையில் இருந்தார். வெற்றிவேலால் அம்மாவை பார்க்க முடியவில்லை. அதனால் வீடியோ வேண்டும் என்று சசிகலாவிடம் கேட்டு அனுமதி பெற்றார். பிப்ரவரி மாதத்தில் அந்த வீடியோவை வெற்றிவேலிடம் நான் கொடுத்தேன். என்னுடைய அனுமதி இல்லாமல் வீடியோவை வெளியிட்டதாக அவரே கூறியுள்ளார். 

தேர்தல் ஆணையத்திடம் அனுமதி வாங்கிவிட்டு வீடியோவை வெளியிட்டிருக்கலாமே என்று வெற்றிவேலிடம் கேட்டேன். சசிகலா மீதுள்ள களங்கத்தை போக்க வெளியிட்டதாக கூறினார். வீடியோ வெளியிட்டதற்காக சசிகலாவிடம் மன்னிப்பு கேட்பேன் என்று வெற்றிவேல் கூறினார். அரசியலுக்கு அப்பாற்பட்டு வெற்றிவேல் எனக்கு நீண்ட கால நண்பராக இருக்கிறார். ஜெயலலிதா மேல் அவருக்கு நிறைய பாசம். அதேபோல் சசிகலா மீதும். சசிகலா மீது கொலைப்பழி தொடர்ந்து சுமத்தப்பட்டதால் வெற்றிவேல் கோபத்தில் இருந்தார். ஜெயலலிதாவின் மறைவு குறித்து பொய் பரப்புரை செய்து சசிகலாவின் பெயரை களங்கப்படுத்தினார்கள்.

கட்சியின் பொதுச் செயலாளர் மீதுள்ள அக்கறையால் அவர் செய்துவிட்டார். அவரை என்ன செய்ய முடியும். எம்எல்ஏ பதவி போனாலும் என்னுடன் இருக்கும் வெற்றிவேல் சுயநலத்திற்காக வீடியோவை வெளியிட்டிருக்க மாட்டார். விசாரணை ஆணையம் எனக்கு சம்மன் அனுப்பி கேட்டால் வீடியோவை கொடுப்பேன். வெற்றிவேல் வீடியோவை வெளியிட்டது சரியா, தவறா என்பது குறித்து கவலையில்லை. வெற்றிவேல் மீது நடவடிக்கை எடுக்குமாறு எனது உறவினர் கூறுவதை ஏற்க முடியாது.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஜெயலலிதா வீடியோ எடுக்கப்பட்டது. மருத்துவமனையில் ஜெயலலிதா கேட்டுக்கொண்டதால் தான், சசிகலா வீடியோ எடுத்தார். வீடியோ மார்பிங் செய்யப்பட்டுள்ளது என்று விசாரணை ஆணையம் புகார் அளிப்பது எந்த விதத்தில் சரியாகும்?” என்று கூறினார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close