[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கர்நாடக சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற வாய்ப்பு இல்லை - கர்நாடக காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ்
  • BREAKING-NEWS விளம்பரத்திற்காக இல்லாமல் சமூக பணி பண்ணலாம். நிஜ வாழ்வில் 4 பேருக்காவது பயன்படும்படி இருப்பேன் - நடிகர் சூர்யா
  • BREAKING-NEWS தமிழ்நாடு திரைப்பட இயக்குநர் சங்கத்தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்.கே.செல்வமணி வெற்றி
  • BREAKING-NEWS இந்தோனேஷியா ஓபன் பேட்மிண்டன்: வெள்ளிப்பதக்கம் வென்றார் சிந்து
  • BREAKING-NEWS ''அதிமுகவின் உண்மையான தொண்டர்கள் திமுகவில் இணைய வேண்டும்'' - திமுக தலைவர் ஸ்டாலின்

பாஜகவினரை சகோதரர்களாக கருதுகிறேன்: பதவியேற்பு விழாவில் ராகுல் பேச்சு

congress-consider-the-bjp-our-brothers-and-sisters-even-though-we-dont-agree-with-them-rahul-gandhi

பாஜகவினரை சகோதரர்களாக நினைப்பதாகவும், ஆனால் காங்கிரஸ் கட்சியை பாஜக அழிக்க நினைப்பதாகவும் ராகுல் காந்தி கூறியுள்ளார். 

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி இன்று முறைப்படி பொறுப்பேற்றார். டெல்லியில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.

கட்சியின் புதிய தலைவராக பதவியேற்ற பின்னர் பேசிய ராகுல் காந்தி, நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்ததாக கூறினார். மேலும் ராகுல் காந்தி, “மக்கள் மீது நம்பிக்கை வைத்து 13 ஆண்டுகளுக்கு முன் அரசியலுக்கு வந்தேன். காங்கிரஸ் கட்சி நாட்டை 21ஆம் நூற்றாண்டுக்கு கொண்டு செல்கிறது. ஆனால் பாரதிய ஜனதா அரசு நாட்டை பின்னோக்கி கொண்டு செல்கிறது. 

நாட்டிற்கான அனைத்து முடிவுகளையும் ஒருவரே எடுக்கிறார். இன்று மக்கள் மாற்றுக் கருத்துக்களை சொல்ல முடிவதில்லை. அரசியல் என்பது மக்களுக்கானது. ஆனால் தற்போது அரசியல் மக்களுக்குக்காக‌ பயன்படுத்தப்படுவதில்லை. பாரதிய ஜனதா கட்சி மக்களை பிளவுபடுத்துகிறது. காங்கிரஸ் கட்சி மக்களை ஒன்றிணைக்கிறது. 

காங்கிரஸ் கட்சியே தனது குடும்பம். இந்தியாவை நாங்கள் வளப்படுத்துவோம். பாரதிய ஜனதா கட்சியுடன் வேறுபாடுகள் இருந்தாலும், அவர்களையும் சகோதரர்களாகவே நினைக்கிறோம். பாஜக காங்கிரஸ் கட்சியை அழிக்க நினைக்கிறது. காங்கிரஸ் கட்சி இல்லாத இந்தியா உருவாக்க நினைக்கிறது. ஆனால் நாங்கள் வெறுப்பு அரசியலை வெறுப்பால் அணுக மாட்டோம்” என்று பேசினார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close