[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாக்டர் எம்.ஜி.ஆர் நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் முதல்வர் பழனிசாமிக்கு அக்டோபர் 20ம் தேதி கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்படுகிறது
  • BREAKING-NEWS பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் 8.33%, கருணைத் தொகை 11.37% வழங்கப்படும் - தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி கொலை குறித்து சீமான் பேசியது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விரிவான அறிக்கை கேட்டுள்ளார் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ
  • BREAKING-NEWS நீட் ஆள்மாறாட்ட வழக்கில் மாணவர் இர்பானின் காவலை அக்டோபர் 25 வரை நீட்டித்தது தேனி நீதிமன்றம்
  • BREAKING-NEWS நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்: ஆவின் பால் டேங்கர் லாரி ஒப்பந்த உரிமையாளர்கள் அறிவிப்பு

தாவூத் இப்ராஹிமை பார்த்ததாக கூட சொல்வார்கள்: ஹர்திக் பதிலடி

hardik-patel-responds-to-vadra-meeting-claim-tomorrow-they-ll-say-i-met-nawaz-sharif-dawood

ராபர்ட் வத்ராவை ரகசியமாக சந்தித்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ஹர்திக் படேல் மறுப்பு தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தல் பிரச்சாரத்தில் தவிர்க்க முடியாத சக்தியாக வலம் வந்தவர் ஹர்திக் படேல். பட்டிதார் அனாமத் அந்தோலன் சமிதி இயக்கத்தின் தலைவரான ஹர்திக் படேல், இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக, பாஜகவுக்கு எதிராக சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார். அவரது இயக்கத்தைச் சேர்ந்த ஆதரவாளர்களும் பெரிய அளவில் பிரச்சாரத்தில் பங்கேற்றனர்.

காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அளிப்பதாக பேச்சுகள் அடிபட்டது முதலே ஹர்திக் படேல் மீது பாஜக நேரடியாகவும், மறைமுகமாகவும் விமர்சனங்களை முன் வைத்து வந்தது. முதலில் ராகுல் காந்தியை இரவில் யாருக்கும் தெரியாமல் ரகசியமாக சந்தித்ததாக ஹர்திக் மீது குற்றச்சாட்டு எழுந்தது. அப்போது, யாரையும் ரகசியமாக சந்திக்க வேண்டிய அவசியம் தனக்கு இல்லை, பிரதமர் மோடி பாகிஸ்தான் பிரதமரை சந்தித்ததை போல் ரகசியமாக சந்திக்க மாட்டேன் என்று ஹர்திக் பதிலடி கொடுத்தார்.

பின்னர் ஹர்திக் பட்டேலும் ஒரு பெண்ணும் இணைந்து ஆபாசமாக இருப்பது போன்ற வீடியோ நவம்பர் மாத மத்தியில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதுகுறித்து ஹர்திக் பட்டேல் கூறுகையில், “இது அசிங்கமான அரசியலின் ஆரம்பம். இதற்குப் பின்னணியில் பாஜகவும் அதன் தலைவர்களும் இருக்கின்றனர். பாஜக வெற்றி பெறுவதற்காக என்னை இழிவுபடுத்துவதற்கு எந்த எல்லைக்கும் போகத் தயாராக இருக்கிறது” என்று கடுமையாக விமர்சித்தார்.

          

இந்நிலையில், பட்டிதார் அமைப்பில் இருந்து சமீபத்தில் விலகிய தினேஷ் பம்பானியா, ஹர்திக் படேல் ராபர் வத்ராவை ரகசியமாக சந்தித்ததாகவும், அமைப்பின் உறுப்பினர்களை தவறாக வழிநடத்தி செல்வதாகவும் குற்றம்சாட்டினார். அக்டோபர் மாதம் டெல்லியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டலில் இந்த சந்திப்பு நிகழ்ந்ததாக கூறிய பம்பானியா, வத்ராவுடனான சந்திப்பின் போது எதாவது ரகசிய ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதா? என்றும் கேள்வி எழுப்பினார். இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள ஹர்திக் படேல், இன்று ராபர்ட் வத்ராவை சந்தித்ததாக சொல்கிறார்கள், நாளை பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீபை சந்தித்ததாக சொல்வார்கள், அதன் பிறகு தாவூத் இப்ராஹிமை பார்த்ததாகவும் சொல்வார்கள் என்று கூறினார்.

                 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close