[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை வழக்கில் நாளை காலை தீர்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் புதிய மாவட்டங்கள் பிரிக்கப்பட்டதற்கான அரசாணை வெளியீடு.
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 76.18 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.54 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS மகாராஷ்டிராவில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்: குரூர நகைச்சுவை என காங்கிரஸ் கண்டனம்
  • BREAKING-NEWS தென் பெண்ணை ஆற்றில் கர்நாடகா கட்டும் அணைக்கு எதிராக தமிழக அரசு தாக்கல் செய்த வழக்கு: உச்நீதிமன்றம் இன்று தீர்ப்பு
  • BREAKING-NEWS இலங்கை அதிபர் தேர்தலுக்கான பரப்புரை இன்றுடன் ஓய்கிறது

திருமாவளவன் தலைக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்தவர் கைது

man-arrested-who-against-thirumavalavan

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தலையை துண்டித்து கொண்டு வருபவர்களுக்கு 1 கோடி ரூபாய் பரிசு அறிவித்த இந்து முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் கோபிநாத்தை காவல்துறையினர் கைது செய்து, கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்து கோயில்களை இடித்துவிட்டு, புத்த விகாரங்களை எழுப்ப வேண்டும் என திருமாவளவன் பேசியதாகக் கூறி அவரது தலையை துண்டிப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என இந்து முன்னேற்ற கழக நிறுவனத் தலைவர் கோபிநாத் அறிவித்தார். அவர்மீது நடவடிக்கை எடுக்கும்படி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர், புகார் அளித்தனர்.

அந்த புகாரின் அடிப்படையில் காரமடை அருகே இருந்த கோபிநாத்தை, திருப்பூர் வடக்கு காவல்துறையினர் கைது செய்தனர். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய பின் கோபிநாத் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close