[X] Close
JUST IN
  • BREAKING-NEWS மாலத்தீவில் எதிர்க்கட்சி வேட்பாளர் வெற்றி
  • BREAKING-NEWS தேர்தலுக்கு பின்பும் பாஜகவுடன் திமுக கூட்டணி வைக்காது: மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS ‘கச்சா எண்ணெய் உற்பத்தியை உயர்த்த முடியாது’: சவுதி அரேபியா திட்டவட்டம்
  • BREAKING-NEWS ரஃபேல் விவகாரம்: ஊழல் ஒழிப்பு ஆணையத்தை இன்று அணுகுகிறது காங்கிரஸ்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.26 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS செல்போனை திருடியதாக சிறுவன் அடித்துக்கொலை
  • BREAKING-NEWS புழல் சிறையில் இருந்த எம்எல்ஏ கருணாஸ் வேலூர் சிறைக்கு மாற்றம்

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மாற்றம்: விஷால் வரவேற்பு

rk-nagar-election-official-replaced-after-row-over-actor-vishal-s-disqualification

ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி மாற்றப்பட்டுள்ளதற்கு நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகருக்கு வரும் 21ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரியாக வேலுச்சாமி செயல்பட்டு வந்தார். தேர்தல் அதிகாரியை மாற்றக்கோரி திமுக உள்பட ஏராளமான கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நடிகர் விஷாலின் வேட்புமனுவை வேலுச்சாமி நிராகரித்தது சர்ச்சையானதால் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆர்.கே.நகரில் தேர்தல் நடத்தும் அதிகாரியாக இருந்த வேலுச்சாமி மாற்றப்பட்டு பிரவீன் நாயர் நியமிக்கப்பட்டிருந்தார்.


இந்நிலையில் நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலர் மாற்றப்பட்டிருப்பதை வரவேற்கிறேன். ஜனநாயகத்தை மீட்டெடுக்கும் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றியாகவே இதை கருதுகிறேன். இனியாவது ஆர்.கே.நகரில் நேர்மையான தேர்தல் நடக்கும் என்று நம்பிக்கை வந்துள்ளது” என்று குறிப்பிட்டு ஒரு பதிவை இட்டுள்ளார். 


 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close