[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அருண் ஜெட்லியின் உடல் முழு அரசு மரியாதையுடன் தகனம்
  • BREAKING-NEWS “ஆடிட்டர் குருமூர்த்தி மன்னிப்பு கோர வேண்டும்” - சிபிஎம் வலியுறுத்தல்
  • BREAKING-NEWS ‘தகாத உறவால் நேர்ந்த கொலை’ - கணவருக்கு மெசேஜ் அனுப்பிய நபர் கைது
  • BREAKING-NEWS “ஒரு கோப்பையையாவது ரவி சாஸ்திரி வென்று காட்ட வேண்டும்” - கங்குலி

சாலையோர கடையில் ராகுல் சாப்பிட்ட பாவ் பஜ்ஜி வீடியோ

on-gujarat-poll-eve-rahul-gandhi-drops-by-pav-bhaaji-stall-for-a-quick-bite

குஜராத் சாலையோர கடையில் ராகுல் பாவ் பஜ்ஜி சாப்பிட்ட வீடியோ ஒன்று காங்கிரஸ் ட்விட்டர் பக்கத்தில் வெளியாகி உள்ளது.

குஜராத் மாநிலத்தில் 22 ஆண்டுகளாக‌ பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. பாஜக அரசுக்கு காங்கிரஸ் சவால் விடும் வகையில் பரப்புரை மேற்கொண்டு வருகிறது. அங்கு நாளை முதல்‌கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
 
நாடே உற்று நோக்கப்படும் குஜராத் தேர்தலில் 89 தொகுதிகளுக்கு நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால், நேற்று மாலை 6 மணியுடன் முதல் கட்ட பரப்புரை ஓய்ந்தது. பொது இடங்களில் வைக்கப்பட்ட கட்சி சின்னங்கள், கொடிகளை அகற்றி வருகின்றனர். இத்தேர்தலில் பாஜகவுக்கும், காங்கிரசுக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. 

இந்நிலையில் ராகுல் காந்தி தனது நவ்சர்ஜன் யாத்ரா பிரச்சாரத்தை எல்லாம் முடித்து கொண்டு திரும்பிய தருணத்தில் குஜராத்திலுள்ள ஒரு சாலையோர தள்ளு வண்டிக் கடையில் சூடாக பாவ் பஜ்ஜி வாங்கி சாப்பிட்டார். அதற்கான ஒரு வீடியோ ஒன்று காங்கிரஸ் சமூக வலைதளமான ட்விட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. குஜராத் உணவு பண்டங்களில் தனித்துவம் மிக்க இந்த பாவ் பஜ்ஜியை மிகவும் ரசித்து சாப்பிட்டதாக அதில் கூறப்பட்டுள்ளது.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close