[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நாடு முழுவதும் தீபாவளி சமயத்தில் பட்டாசு வெடிக்க 2 மணிநேரம் மட்டுமே அனுமதி- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆன்லைனில் பட்டாசுகளை விற்க தடை விதித்தது உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் பட்டாசு விற்பனைக்கோ, தயாரிக்கவோ தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.53 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.15 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை

மோடியால் ராஜகுரு என்று அழைக்கப்பட்ட சோ ராமசாமி நினைவு நாள் இன்று

cho-ramaswamy-memorial-day

சிறந்த அரசியல் விமர்சகராக பலராலும் அறியப்பட்ட சோ ராமசாமி, ‌பல முக்கிய அரசியல் திருப்பங்களுக்கு காரணமாக இருந்தவர். சோவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் இன்று

பத்திரிகை துறையில் நுழையும் முன்னரே திரைப்படங்கள் மூலமாகவும் மேடை நாடகங்கள் மூலமாகவும் புகழ்பெற்றிருந்தார் சோ. இவையே அவரது அரசியல் விமர்சனங்களுக்கு அடித்தளமாக அமைந்தன.

1960-ஆம் ஆண்டில் சம்பவாமி யுகே யுகே நாடகத்தின் வசனங்களை தணிக்கை செய்ய தமிழக அரசு முயன்றது. அந்தச் சம்பவமே, மக்கள் மத்தியில் அரசியல் விமர்சகர் என்ற பெயரை சோவுக்குப் பெற்றுத் தந்தது. துக்ளக் தலையங்கங்கள் மூலமாக ஒருபுறம் அரசியல்வாதிகளைக் கடுமையாக விமர்சித்தாலும், மற்றொருபுறம் அவர்களுடன் நெருக்கமான உறவையும் கொண்டிருந்தவர் சோ.

முன்னாள் முதல்வர் காமராஜர், எம்ஜிஆர், ஜெயப்பிரகாஷ் நாராயண், பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி, முன்னாள் பிரதமர் சந்திரசேகர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் மூப்பனார் உள்ளிட்டோரும் இவர்களில் அடங்குவார்கள். காமராஜருக்கும் இந்திராகாந்திக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டபோது, இருவருக்கும் இடையே அரசியல் தூதுவராகவும் சோ செயல்பட்டிருக்கிறார்.

தனிப்பட்ட முறையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கும், சோவுக்கும் இடையே நெருக்கமான பாசம் உண்டு. ஜெயலலிதாவுக்கு அரசியல் ஆலோசனை கூறுபவராகவும் சோ கருதப்பட்டு வந்தார். இருப்பினும் 1996-ஆம் ஆண்டு தமிழக சட்டப்பேரவைத் தேர்தலின்போது அதிமுகவுக்கு மாற்றாக, நடிகர் ரஜினிகாந்த் ஆதரவுடன் திமுக, காங்கிரஸ் கூட்டணி உருவாவதற்கும் காரணமாக இருந்தார். 2011-ஆம் ஆண்டு விஜயகாந்த் தலைமையிலான தேமுதிகவுடன் அதிமுக கூட்டணி அமைத்ததிலும் சோவுக்குப் பங்குண்டு.

‌அரசியல் ரீதியாக சோவால் அதிகமாக விமர்சிக்கப்பட்டவர் திமுக தலைவர் கருணாநிதி. இருப்பினும், கருணாநிதி உடல்நலம் குன்றியிருந்தபோது, சோவும், சோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது கருணாநிதியும் நேரில் சென்று நலம் விசாரித்துக் கொண்டனர்.

ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 15-ஆம் தேதி நடக்கும் துக்ளக் ஆண்டுவிழாவில் அவரது கேள்வி பதில் உரையைக் கேட்பதற்கென்றே ஒரு வாசகர் கூட்டம் உண்டு. ஒவ்வொரு விழாவிலும் அரசியல்வாதிகளை விருந்தினர்களாக அழைப்பது சோவின் வழக்கம்.

அந்த வகையில் துக்ளக் ஆண்டுவிழா மூலமாக நரேந்திர மோடியை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்தியவர் என்ற பெயரும் சோவுக்கு உண்டு. சோவை ராஜகுரு அழைத்ததன் மூலம் பாரதிய ஜனதாவின் வளர்ச்சிக்கும் உதவியவர் என்பதை வெளிப்படையாகவே குறிப்பிட்டார் நரேந்திர மோடி. இருப்பினும் பாரதிய ஜனதாவின் திட்டங்கள் குறித்தும் அரசியல் நிலைப்பாடுகள் குறித்தும் தனது தலையங்கங்களிலும் பலமுறை விமர்சித்தார் சோ.

1980-ஆம் ஆண்டு விமான விபத்தில் சஞ்சய் காந்தி மறைந்தபோது, அந்த விமானத்தை இயக்கிய விமானி சக்சேனா படம் அச்சிடப்பட்ட தபால்தலைகளை துக்ளக் இதழில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதுபற்றித் தெரிந்து கொள்ளாத தபால்துறை, அந்தத் தபால்தலைகள் ஒட்டப்பட்ட தபால்களை அபாராதம் இன்றி துக்ளக் அலுவலகத்துக்கு கொண்டு வந்து சேர்த்தது. சோவின் அரசியல் விமர்சனங்களும், துணிவும் எந்த அளவுக்கு ஆழமானவை என்பதை உணர்த்துவதற்கு இந்த ஒரு சம்பவமே போதுமானது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close