[X] Close
JUST IN
  • BREAKING-NEWS பாக். டெஸ்ட் கேப்டன் பொறுப்பில் இருந்து சர்ஃபராஸ் நீக்கம்
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

ராமர் கோயில் விவகாரத்தில் ராகுல் நிலைப்பாடு என்ன?: அமித்ஷா கேள்வி

clarify-stand-on-ram-temple-amit-shah-to-rahul-gandhi

ராமர் கோயில் விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை ராகுல்காந்தி தெளிவுபடுத்த வேண்டும் என பாஜக தலைவர் அமித்ஷா கூறியுள்ளார். 

அயோத்தி நிலம் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது, சன்னி வஃக்பு வாரியம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான கபில் சிபில் 2019-ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறும் வரை இந்த வழக்கை விசாரிக்க கூடாது என்று வலியுறுத்தினார். மேலும், 2019 தேர்தலுக்கு முன்பு சட்டப்படி ராமர் கோயில் கட்டப்படும் என்று பாஜக கூறியுள்ளதாக கபில்சிபில் சுட்டிக்காட்டினார்.  

இந்நிலையில் குஜராத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய அமித்ஷா, “வருங்கால காங்கிரஸ் கட்சி தலைவருக்கு நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். அயோத்தி விவகாரத்தில் ராகுல் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தட்டும்” என்று கூறினார். 
மேலும், “ஒரு பக்கம் ராகுல் காந்தி கோயில்களுக்கு சென்று கொண்டிருக்கிறார். மற்றொரு புறம் அவர்கள் ராமர் ஜென்மபூமி வழக்கை தாமதமாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். காங்கிரஸ் இரட்டை நிலைப்பாட்டை கொண்டுள்ளது” என்றார்.

        

அமித்ஷாவின் குற்றச்சாட்டு பதில் அளித்த காங்கிரஸ் தலைவர் ரன்தீப் சுர்ஜிவாலா, "அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புபடி முடிவு எடுக்கப்படும் என்பதில் காங்கிரஸ் கட்சி தெளிவாக உள்ளது” என்றார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close