[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வீடியோ கேம் ஒரு மன நோய்: பெற்றோருக்கு எச்சரிக்கை
  • BREAKING-NEWS ஒகேனக்கல்லில் பரிசல்கள் இயக்கவும், சுற்றுலா பயணிகள் குளிக்கவும் 3ஆம் நாளாக தடை
  • BREAKING-NEWS கோவை குற்றால அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்ல 9ஆம் நாளாக வனத்துறை தடை விதிப்பு
  • BREAKING-NEWS திருப்பதி அருகே வனப்பகுதியில் ரூ.1.5 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS சுங்கச்சாவடி தாக்குதல், என்.எல்.சி முற்றுகை போராட்ட வழக்கில் வேல்முருகனுக்கு நிபந்தனை ஜாமீன்
  • BREAKING-NEWS தமிழ் உள்ளிட்ட மொழிகளில் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத அனுமதிக்கப்படும்- மத்திய அமைச்சர் ஜவடேகர்
  • BREAKING-NEWS ஜூலை 12 இல் எஸ்.வி.சேகர் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும்- நெல்லை நீதிமன்றம்

உண்மை வெல்லும் விஷால்: வாழ்த்தினார் கெஜ்ரிவால்

arvind-kejriwal-wishes-to-actor-vishal

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் வேட்புமனு ஏற்கப்பட்டத்தை அடுத்து விஷாலுக்கு கெஜ்வரிவால் வாழ்த்து தெரிவித்துள்ளார்.  

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் நிராகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நடிகர் விஷாலின் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

 அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “நேர்மை, நீதி, நியாயம் ஜெயித்தது. எனது மனுவை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டது. காலையில் இருந்து இதற்காக தான் காத்திருந்தோம். நியாயமாக என்ன நடைபெற வேண்டுமோ அதனை தேர்தல் ஆணையம் செய்துள்ளது. புகாரில் உண்மை இல்லை என்ற அடிப்படையில் மனு ஏற்கப்பட்டுள்ளது. சக சுயேட்சை வேட்பாளர்கள் எனக்கு உதவியாக இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி. மனு தாக்கல் செய்வதில் இருந்து ஏற்கப்படும் வரை அனைத்துமே போராட்டம் தான். நாளை முதல் மக்களிடம் சென்று வாக்கு சேகரிக்க உள்ளேன். நல்லது நடக்க வேண்டும் என்றால் தடைகள் இருக்கவே செய்யும். தேர்தலை நேர்மையாக சந்திக்க உள்ளேன்” என்று கூறினார். இதையே தனது ட்விட்டர் பக்கத்தில் சுறுக்கமாக பதிவிட்டிருந்தார்.

இதற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், உண்மை எப்போதுமே வெல்லும் என்று கூறி விஷாலுக்கு தனது வாழ்த்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close