[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் இந்தியாவின் சாய்னா நேவால்
  • BREAKING-NEWS நீர் மேலாண்மை குறித்து தமிழக அரசு எந்த சிந்தனையும் இல்லாமல் இருப்பது பேராபத்தை ஏற்படுத்தும்- டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS முதலமைச்சரை அவதூறாக பேசியதாக திண்டுக்கல் லியோனி மீது வழக்கு
  • BREAKING-NEWS குண்டர் சட்ட முறைகளை புதுவை அரசு கடைபிடிக்கவில்லை: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.22 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.69 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேரளா: பம்பை, நிலக்கல், சன்னிதானம், இலவுங்கல் பகுதிகளில் மேலும் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு நீட்டிப்பு - பத்தினம்திட்டா காவல்துறை கோரிக்கையை ஏற்று ஆட்சியர் நூஹ் உத்தரவு
  • BREAKING-NEWS டெல்லியில் தசரா விழா கோலாகலம்... குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி பங்கேற்பு...

சேரனின் குற்றச்சாட்டுக்கு விஷால் விளக்கம்

vishal-said-that-he-was-not-contesting-elections-illegally

சேரனின் குற்றச்சாட்டுக்கு சட்டத்திற்கு புறம்பாக தேர்தலில் போட்டியிடவில்லை என விஷால் பதிலளித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வேட்புமனு தாக்கல் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிடுவதாக அறிவித்திருந்த நடிகர் விஷால் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

விஷால் வேட்புமனு தாக்கல் செய்த சிறிது நேரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய சேரன், விஷால் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்கட்டும். தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் தலைவரான 8 மாதத்தில் கொடுத்த வேலைகள் எதையும் விஷால் நிறைவேற்றவில்லை, அவரது இயலாமையை கருத்தில் கொண்டு தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். விஷால் தேர்தலில் நிற்பதால் தயாரிப்பாளர்கள் சங்கம் பாதிக்கப்படும் என்று குற்றம்சாட்டினார்.

சேரனின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த விஷால், இந்தத் தேர்தலில் மக்களின் பிரதிநிதியாக பங்கேற்கிறேன். நடிகர் சங்கத் தேர்தலில் வெற்றி பெற்று பின்னர் தயாரிப்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்ட போதும் இதே போன்ற பிரச்னைகள் வந்தன. தயாரிப்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற்று தற்போது பொதுத் தேர்தலில் நிற்கும் போதும் அதே போன்று பிரச்னைகள் வருகின்றன. சட்டத்திற்கு புறம்பாக தேர்தலில் போட்டியிடவில்லை. நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில், முதலில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு அதில் வெற்றி பெற்றோம். அடுத்து தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். அதுபோன்று தான் இந்த பொதுத்தேர்தலும் என்றார். இந்தத் தேர்தல் விஷால் கட்சி தொடங்குவதற்காக அல்ல. மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில்தான் தேர்தலில் களமிறங்குகிறேன். அரசியல்வாதியாக இல்லாமல ஆர்.கே.நகர் மக்களில் ஒருவனாக தேர்தலில் போட்டியிடுகிறேன் என்றார். ஆர்.கே.நகர் மக்களின் கோரிக்கைகளை கேட்டு அதனை நிறைவேற்றுவேன். பரப்புரையின் போது மக்களின் பிரச்னைகளை முன்னிலைப்படுத்தி தேர்தலில் வாக்கு கேட்கவுள்ளேன் என்றார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close