[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS #MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS ராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!

வேட்புமனு தாக்கல் செய்தார் ராகுல்: முன்மொழிந்தார் சோனியா

rahul-gandhi-files-his-nomination-for-the-post-of-congress-president

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடுவதற்காக ராகுல் காந்தி வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி அக்பர் சாலையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் ராகுல் வேட்புமனு தாக்கல் செய்தார். ராகுல் காந்தியின் வேட்புமனுவை சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோர் முன்மொழிந்தனர். வேட்புமனு தாக்கலின்போது குலாம் நபி ஆசாத், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், சுஷில்குமார் ஷிண்டே மற்றும் அகமது பட்டேல் ஆகியோர் உடன் இருந்தனர்.

வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். இருப்பினும் இன்னும் வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இனியும் யாரும் தாக்கல் செய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரியவில்லை. 2013 ஆம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக துணைத் தலைவராக இருந்து வரும் ராகுல் காந்தி தற்போது தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.

வேட்புமனு தாக்கலுக்கு முன்பாக மன்மோகன் சிங் மற்றும் பிரணாப் முகர்ஜியை சந்திந்து ராகுல் காந்தி வாழ்த்துகளை பெற்றார். வேட்புமனு தாக்கல் செய்த உடனே ராகுல் காந்திக்கு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் பஞ்சாப் மாநில முதலமைச்சருமான அம்ரிந்தர் சிங், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா ஆகியோர் தங்களது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close