[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

ஆர்.கே.நகரில் திமுகவின் வெற்றியை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: வைகோ

no-force-can-prevent-the-victory-of-the-dmk-in-election-vaiko

ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் திமுக வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

வரும் டிசம்பர் 21 ஆம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து திமுக சார்பில் மருதுகணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் நேற்று மதிமுக சார்பில் நடத்தப்பட்ட உயர்மட்டக்குழு கூட்டத்திற்கு பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக வைகோ அறிவித்தார்.

இதற்கு திமுகவின் செயல் தலைவர் ஸ்டாலின், வைகோவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்திருந்தார். இந்நிலையில் வைகோவுக்கு நன்றி தெரிவிக்க மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்திற்கு வந்தார், திமுக வேட்பாளர் மருதுகணேஷ். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஆர்.கே.நகரில் மருதுகணேஷ் வெற்றி பெறுவதை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது என்றார். மேலும் ஆளுங்கட்சி நூதனமான முறையில் வெற்றி பெறுவதற்கு எந்த செயலில் ஈடுபட்டாலும், திமுகவின் வெற்றியை மக்கள் உறுதி செய்துவிட்டனர் என்று கூறினார். அதேபோல் மதிமுக சார்பில் மருதுகணேஷை ஆதரிப்பதாக தான் அறிவித்ததிற்கு ஸ்டாலின் தொலைபேசியில் நன்றி தெரிவித்தார் என்றும் கூறினார்.

அடுத்துவரும் நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுக கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்றும், அந்த வெற்றிக்கு நுழைவாயிலாக ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அமையும் என்றும் வைகோ தெரிவித்தார். எதிரிகள் பலர் திராவிட இயக்கத்தை அழிக்க முயற்சித்து வருவதாகவும், அதை பாதுகாக்கும் கடமை மதிமுகவிற்கு உள்ளதாகவும் வைகோ கூறினார்.
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close