[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வடக்கு அந்தமான், கிழக்கு வங்கக்கடல் பகுதிக்கு அடுத்த 12 மணி நேரத்திற்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS பணத்திற்காக வாக்களிப்பது தன்னைத்தானே விற்பதற்கு சமம்: வைகோ
  • BREAKING-NEWS பாஜக நோட்டுகள், டோக்கன்களை தந்து வாக்கு கேட்காது; திட்டங்களை தந்து மட்டுமே வாக்கு கேட்கும் - தமிழிசை
  • BREAKING-NEWS நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: மன்னிப்புக் கேட்டார் ஹெச்.ராஜா!
  • BREAKING-NEWS பெண்கள் கரும்பல்ல; இரும்பு என்பதை நிரூபிக்கும் காலம் வந்துவிட்டது! - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84.64 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.22 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியை எட்டியதால் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை

நான் அரசியல்வாதி இல்லை, மக்கள் பிரதிநிதி: விஷால்

actor-vishal-said-about-rk-nagar-by-election-contest

ஆர்.கே நகர் தேர்தலில் அரசியல்வாதியாக நிற்கவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் இன்று வேட்புமனுத்தாக்கல் செய்கிறார். இதற்காக முன்னாள் முதலமைச்சர் காமராஜர் நினைவில்லத்திலும், ராமாபுரத்தில் உள்ள எம்ஜிஆர் இல்லத்திலு அவர் மரியாதை செய்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய விஷால், “நான் அரசியல் வாதியாக தேர்தலை பார்க்கவில்லை, மக்களுடைய பிரதிநிதியாக பார்க்கிறேன். ஆர்.கே நகர் மக்களின் அடிப்படை தேவை என்ன?, அடிப்படை பிரச்னைகள் என்ன? ஏன் இத்தனை நாள் பிரச்னைகள் சரிசெய்யப்படவில்லை? பிரச்னைகள் குறித்து யாரிடம் கேள்வி கேட்பது? இதற்கெல்லாம் விடையாக தான் நான் ஆர்.கே நகரில் வேட்புமனு தாக்கல் செய்கிறேன். இதனால் தான் நான் அரசியல் வாதியாக மனு தாக்கல் செய்யவில்லை, மக்களுக்காக வேட்புமனு பெட்டியில் எனது மனுவை செலுத்துகிறேன் என்று கூறினேன். எனக்கு பிண்ணியில் யாரும் கிடையாது” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “சிங்கப்பூர், அமெரிக்கா போன்ற வாழ்க்கையை மக்கள் கேட்கவில்லை. சுதந்திரம் பெற்றது முதலே மக்கள் அடிப்படை வசதியை மட்டுமே கேட்டு வருகிறார்கள். இன்னும் ஏன் அது கிடைக்கவில்லை என்று மக்கள் சிந்திக்கிறார்கள். ஒரு மாற்றம் வரவேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காகத்தான் நான் ஆர்.கே நகரில் நிற்கிறேன். நான் எனது மன தைரியத்தை மட்டும் நம்பி நிற்கவில்லை, ஆர்.கே நகர் மக்களின் தைரியத்தையும் நம்பி தான் நிற்கிறேன். மக்கள் ஆதரவைத் தவிர, வேறு யார் ஆதரவிலும் நான் தேர்தலில் நிற்கவில்லை. மக்களும், இளைஞர்களும் எனக்கு ஆதரவு தருவார்கள். தேர்தலில் நான் நிற்பது ஒரு பதிவு தான், ஆனால் நான் வெற்றி பெற மாட்டேன் என யாரும் கூற இயலாது” என்று கூறினார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close