[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த ரேஷன் கடை ஊழியர்களின் ஸ்டிரைக் வாபஸ்
  • BREAKING-NEWS தனியார் தண்ணீர் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் - தனியார் லாரி உரிமையாளர்கள் சங்கம்
  • BREAKING-NEWS சபரிமலைக்கு வரும் பெண் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் - கேரள டிஜிபிக்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவு
  • BREAKING-NEWS #MeToo விவகாரத்தில் மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் எம்.ஜே.அக்பர் ராஜினாமா செய்தார்
  • BREAKING-NEWS ராஜராஜ சோழனின் 1033ஆவது சதய விழாவையொட்டி அக்டோபர் 20ஆம் தேதி தஞ்சை மாவட்டத்தில் விடுமுறை - ஆட்சியர் அண்ணாதுரை
  • BREAKING-NEWS ‘இந்தியாவின் உளவு அமைப்பு என்னை கொல்ல சதித்திட்டம்’- இலங்கை அதிபர் குற்றச்சாட்டு
  • BREAKING-NEWS இன்று காலை முடங்கி மீண்டது யூ டியூப்!

13 ஆண்டுகளுக்கு பின் திமுகவுக்கு மதிமுக ஆதரவு

mdmk-supports-dmk-in-rk-nagar-poll

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவுக்கு மதிமுக ஆதரவு அளித்துள்ளது. 2004-ஆம் ஆண்டுக்குப் பின் தற்போது திமுக-வுடன் மதிமுக மீண்டும் கைகோர்த்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். திமுக வேட்பாளருக்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துள்ளன.

இந்நிலையில் மதிமுக உயர்நிலைக் குழு கூட்டம் சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில் நடைபெற்றது. இதில் இடைத்தேர்தலில் மதிமுகவின் நிலைப்பாடு குறித்து விவாதிக்கப்பட்டது. பெரும்பாலான உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் இடைத்தேர்தலில் திமுக-விற்கு ஆதரவளிக்கலாம் என கருத்து தெரிவித்தனர். இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் திமுகவிற்கு மதிமுக ஆதரவு அளிக்கும் எனத் தெரிவித்தார். திராவிட
இயக்கத்தை காக்கவும், தமிழக நலன் கருதியும் ஒருமித்த கருத்துடன் இந்த முடிவை எடுத்துள்ளதாக வைகோ கூறினார். கடைசியாக 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலின்போது திமுவுடன் மதிமுக கூட்டணி வைத்திருந்தது. தற்போது 13 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கைகோர்த்துள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் மூலம் மத்திய பாஜக அரசுக்கு பாடம் புகட்டவே திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக குறிப்பிட்ட வைகோ, அதிமுகவை இயக்கும் பாஜக அரசு ஆளுநர் மூலம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற துடிப்பதாகவும் சாடினார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close