[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோப்பையுடன் வந்த வீரர்களை உற்சாகமாய் வரவேற்ற பிரான்ஸ்
  • BREAKING-NEWS 100 கிலோ தங்கம், ரூ.160 கோடி பணம் பறிமுதல்; ஒப்பந்ததாரரின் வீட்டில் தொடரும் சோதனை
  • BREAKING-NEWS கர்நாடகாவின் கிருஷ்ணராஜ சாகர் அணையில் விநாடிக்கு 60 ஆயிரம் கன அடி உபரி நீர் திறப்பு
  • BREAKING-NEWS சத்தீஸ்கர்: பர்தாபூரில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலில் 2 பி.எஸ்.எப் வீரர்கள் உயிரிழப்பு
  • BREAKING-NEWS நியூட்ரினோ திட்டத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாது- திட்ட இயக்குநர் விவேக் தத்தார்
  • BREAKING-NEWS நெல்லை: குற்றாலம் பிரதான அருவியில் வெள்ளப்பெருக்கால் சுற்றுலா பயணிகள் குளிக்கத்தடை
  • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சி மூன்றாவது கூட்டணிக்கு முயற்சிப்பதாக வதந்தி பரப்பப்படுகின்றது- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

காங்கிரசில் அதிரடி மாற்றங்கள்: தயாராகிறார் ராகுல்

rahul-plans-to-change-in-its-party

காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்கத் தயாராகி வரும் ராகுல் காந்தி, கட்சியில் அதிரடி மாற்றங்களை செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரசின் உட்கட்சிப் பூசலை சமாளிக்க ரகசிய குழு அமைக்கவும், தேர்தல் பணி, பரப்புரை, நிர்வாகம் ஆகியவற்றுக்கும் தனித்தனி குழுக்கள் அமைக்கவும் ராகுல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்சி நிர்வாகிகள் மாற்றம் பெரிய அளவில் இருக்கும் என்று டெல்லியில் காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. 
வயதானவர்களை நீக்கி விட்டு, புதியவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்க ராகுல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு 4ஆம் தேதி ராகுல் வேட்புமனு தாக்கல் செய்வார் என்றும் 5ஆம் தேதி அவர் தலைவராக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close