[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ராஜீவ்காந்தி குறித்த பேச்சை திரும்பப் பெறமாட்டேன் - சீமான்
  • BREAKING-NEWS தூத்துக்குடி எம்.பி. கனிமொழியின் வெற்றியை எதிர்த்து தமிழிசை தொடர்ந்த மனுவை வாபஸ் பெற உயர்நீதிமன்றம் அனுமதி
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.

அரசியல் கட்சிகளின் செலவினங்களை ஆய்வு செய்ய 12 பேர் கொண்ட குழு தமிழகம் வருகை: ராஜேஷ் லக்கானி

12-member-panel-to-visit-tamil-nadu-to-inspect-political-leaders-expenses-rajesh-lakhoni

சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் செலவினங்களை ஆய்வுசெய்ய முதற்கட்டமாக 12 பேர் கொண்ட குழு தமிழகம் வர இருப்பதாக ‌தலைமைத் தேர்தல் அதிகாரி ‌ராஜேஷ் லக்கானி‌ தெரிவித்துள்ளார்.

தேர்தல் அறிவிக்கைக்கு முன்னரே பார்வையாளர்கள் அனுப்பப்படுவது இதுவே முதல்முறை என்றும் அவர் கூறியுள்ளார். 19 மற்றும் 20-ஆம் தேதிகளில் சென்னை வரும் செலவின பார்வையாளர்கள், 4 குழுக்களாகப் பிரிந்து தமிழகம் முழுவதும் ஆ‌ய்வு செய்ய இருப்பதாக லக்கானி தெரிவித்துள்ளார்.

செலவின பார்வையாளர்களில் பெரும்பாலானோர் வருமானவரித்துறை அதிகாரிகள் என்றும், வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தாக்கல் செய்துள்ள செலவுக் கணக்கு அறிக்கையை பார்வையாளர்கள் ஆய்வு செய்வார்கள் என்றும் தலைமைத் தேர்தல் அதிகாரி கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close