[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
  • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
  • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
  • BREAKING-NEWS அண்ணா அறிவாலயத்திற்கு திமுக தலைவர் கருணாநிதி வருகை
  • BREAKING-NEWS டிடிவி தினகரன் யார்?, கட்சியின் அடிப்படை உறுப்பினராக கூட இல்லை: முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் திமுக வேட்பாளரை ஆதரித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பரப்புரை
  • BREAKING-NEWS உடல்நலன் கருதி அரசியலில் இருந்து விலக காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி முடிவெடுத்திருப்பதாக தகவல்
  • BREAKING-NEWS ராஜஸ்தானில் கொள்ளையன் நாதுராமின் கூட்டாளிகள் 4 பேர் கைது
  • BREAKING-NEWS வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்படும் செல்போன், டிவிக்கான சுங்கவரி 10% இருந்து 20% உயர்வு- மத்திய அரசு
  • BREAKING-NEWS அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31 வரை அவகாசம்- உச்சநீதிமன்றம்
  • BREAKING-NEWS கடலூரில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் ஆய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக்கொடி ஏந்தி பேரணி
  • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 15வது நாளாக தடை விதிப்பு
அரசியல் 01 Dec, 2017 01:30 PM

அண்ணா இல்லாத அதிமுக கொடியுடன் தினகரன் வேட்புமனு தாக்கல்

ttv-dhinakaran-filed-nominations

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் டிடிவி தினகரன், தனது ஆதரவாளர்களுடன் புதிய கொடிகளோடு வேட்புமனு தாக்கல் செய்ய வந்தார்.

அதிமுகவின் அதிகாரப்பூர்வ இரட்டை இலை சின்னத்திற்கு டிடிவி தினகரன் - முதலமைச்சர் பழனிசாமி தரப்பு உரிமை கோரிய நிலையில் முதலமைச்சர் அணிக்கே இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கியது. மேலும் முதலமைச்சர் பழனிசாமி அணி, அதிமுக தலைமை அலுவலகம், அதிமுகவின் கொடி ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் தெரிவித்துவிட்டது. இது தினகரன் தரப்பிற்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே, டிசம்பர் 21 ஆம் தேதி நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தில் மதுசூதனன் போட்டியிடுகிறார். சசிகலா அணி தரப்பில் போட்டியிடும் டிடிவி தினகரன், தனக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட தொப்பி சின்னத்தையே வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் கோரிக்கை வைத்துள்ளார். ஆனால் டிடிவி தினகரனுக்கு தேர்தல் ஆணையம் தொப்பி சின்னம் வழங்க டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஈபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் இன்று பிற்பகலில் முடிவெடுக்க டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில் டிடிவி தினகரன் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வரும்போது புதிய கொடியுடன் வந்து தனது வேட்புமனுவினை தாக்கல் செய்தார். அண்ணா உருவம் இல்லாத கருப்பு, வெள்ளை, சிவப்பு நிற கொடியை டிடிவி தினகரனின் ஆதரவாளர்கள் தங்கள் கைகளில் வைத்திருந்தனர். அதிமுகவின் கொடியில், கருப்பு, வெள்ளை, சிவப்பு கொடியுடன் அண்ணா உருவமும் இடம்பெற்றிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close