[X] Close
JUST IN
 • BREAKING-NEWS ஆர்.கே.நகரில் பணப்பட்டுவாடாவை தடுக்கக்கோரி தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியிடம் திமுகவினர் புகார் மனு
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தேர்தலை நிறுத்த சதி நடைபெறுகிறது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் மக்கள் டிடிவி தினகரனை வீட்டிற்கு அனுப்ப வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS நாகையில் போராட்டம் நடத்த வந்த ஹெச்.ராஜாவை வஞ்சியூரில் காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்
 • BREAKING-NEWS பணப்பட்டுவாடா செய்தால் தேர்தலை ரத்து செய்வது என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது: திருமாவளவன்
 • BREAKING-NEWS ஆர்.கே.நகர் தொகுதிக்குட்பட்ட கொருக்குப்பேட்டையில் உள்ள பிசியோதெரபி கிளினிக்கில் கணக்கில் வராத ரூ.13 லட்சம் பறிமுதல்
 • BREAKING-NEWS இருண்டு கிடக்கும் தமிழகத்திற்கு இடைத்தேர்தல் முடிவு வெளிச்சத்தை பாய்ச்சட்டும்- ஸ்டாலின்
 • BREAKING-NEWS வரும் 19 ஆம் தேதி கன்னியாகுமரி மற்றும் திருவனந்தபுரத்திற்கு பிரதமர் வர உள்ளதாக தகவல்
 • BREAKING-NEWS ஆபத்தான நிலையில் தான் ஜெயலலிதாவை அப்போலோ மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்- பிரதாப் ரெட்டி
 • BREAKING-NEWS காங்கிரஸ் கட்சியின் தலைவராக முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார் ராகுல் காந்தி
 • BREAKING-NEWS ஆளுநரின் ஆய்வு அவரது அதிகாரத்துக்கு உட்பட்டது
 • BREAKING-NEWS தூத்துக்குடி அருகே கடலில் நாட்டுப்படகு பழுதாகி மூழ்கியதில் மீனவர் கென்னடி உயிரிழப்பு
 • BREAKING-NEWS நீர்மட்டம் குறைந்ததால் வைகை அணையில் இருந்து பாசனத்துக்கு நீர் திறக்கப்படுவது நிறுத்தப்பட்டது
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் நீர்வரத்து சீராகாததால் 16வது நாளாக குளிக்க தடை விதிப்பு
அரசியல் 01 Dec, 2017 08:45 AM

ஆர்.கே.நகரில் மக்களை ஈர்க்கும் தேர்தல் ஆணையத்தின் பேனர்கள்..!

election-commission-banner-in-rk-nagar

பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கக் கூடாது ‌என விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் ஆணையம் சார்பில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்ட ஆர்.கே.நகருக்கு மீண்டும் டிசம்பர் 21 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுகிறது. தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருதுகணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுவது தற்போது வரை உறுதியாகி உள்ளது. திமுகவிற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

இந்நிலையில் தேர்தலில் பணம் பெற்றுக்கொண்டு வாக்களிக்கக் கூடாது என வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் ஆர்.கே.நகர் தொகுதியில் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையம், பூங்கா போன்ற மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் தேர்தல் ஆணையம் சார்பில் இந்த பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. புகார் தெரிவிப்பதற்கான தொலைபேசி எண்களும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளன. வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்வதைத் தடுக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக, அரசியல் கட்சிகள்தான் பேனர் வைப்பதை பார்த்திருப்போம். தற்போது தேர்தல் ஆணையம் சார்பில் விழிப்புணர்வு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதால் அதனை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close