[X] Close
JUST IN
  • BREAKING-NEWS 22 ஆம் தேதி கல்லணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும்- அமைச்சர் துரைக்கண்ணு
  • BREAKING-NEWS நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு எதிரான வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு நடைபெறும்
  • BREAKING-NEWS புதிய தலைமுறை செய்தி எதிரொலி: கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணை நீர்தேக்க பகுதியில் அனுமதியின்றி மணல் அள்ளிய 2 மினி லாரிகள் பறிமுதல்
  • BREAKING-NEWS புதுக்கோட்டையில் ஆளுநர் ஆய்வுக்கு எதிராக கருப்புக்கொடி போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர் கைது
  • BREAKING-NEWS குமரி: பெருஞ்சாணி அணையில் உபரி நீர் திறப்பால் தாமிரபரணி ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை
  • BREAKING-NEWS தமிழகத்திற்கான முன்னேற்ற திட்டங்களை ரஜினி ஆதரிக்கிறார்; அதற்கு நன்றி- தமிழிசை
  • BREAKING-NEWS டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வை குறைக்கக்கோரி நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் லாரிகள் வேலைநிறுத்தம்

ஆர்.கே.நகர் தேர்தல்: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியில்லை

rk-nagar-byelection-cpi-m-did-not-contest

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் டிசம்பர் 21-ஆம் தேதி நடைபெறுகிறது. தேர்தலில் அதிமுக சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். திமுக சார்பில் மருது கணேஷ், நாம் தமிழர் கட்சி சார்பில் கலைக்கோட்டுதயம், டிடிவி தினகரன் ஆகியோர் போட்டியிடுவது தற்போது வரை உறுதியாகி உள்ளது. திமுகவிற்கு காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் ஆகியவை ஆதரவு அளித்துள்ளன.

இந்நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் குறித்து முடிவு எடுப்பதற்காக கோவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் ஆர்.கே.நகர் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போட்டியிடுவதில்லை என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் கடந்த மூன்று முறை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close