[X] Close
JUST IN
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
 • BREAKING-NEWS காவல் ஆய்வாளர் பெரியபாண்டி கொள்ளையர்களால் சுட்டுக் கொல்லப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது - வைகோ
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 392/4
 • BREAKING-NEWS இலங்கை அணிக்கு எதிரான 2ஆவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்தார்
 • BREAKING-NEWS 2017 அக்டோபர் வரை 16,301 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டு 52 பேர் உயிரிழந்தனர்- தமிழக அரசு
 • BREAKING-NEWS தாயார் கொலைக்கும், எனக்கும் தொடர்பு இல்லை- தஷ்வந்த்
 • BREAKING-NEWS சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டி குடும்பத்துக்கு விரைவில் நிதி- முதலமைச்சர்
 • BREAKING-NEWS அரசியல் சார்பில்லாமல் நடிகர் சங்கம் செயல்பட வேண்டும் என்பதே எங்கள் கொள்கையாக இருந்தது- பொன்வண்ணன்
 • BREAKING-NEWS மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 2,039 கன அடியில் இருந்து 1,576 கன அடியாக குறைந்தது
 • BREAKING-NEWS இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்ற புகாரில் டிடிவி தினகரன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
 • BREAKING-NEWS கொளத்தூர் நகைகடை கொள்ளையர்களை ராஜஸ்தானில் பிடிக்க முயன்றபோது காவல் ஆய்வாளர் பெரியபாண்டி சுட்டுக்கொலை
 • BREAKING-NEWS ஈரான் நாட்டின் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் நில நடுக்கம்- ரிக்டர் அளவில் 6.1 ஆக பதிவு
 • BREAKING-NEWS தேனி: பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 13வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS எதிர்காலத்தில் சாதிய ஆணவப் படுகொலைகளைத் தடுக்க இந்த தண்டனை உதவும்- பாலபாரதி
அரசியல் 29 Nov, 2017 07:54 PM

மலேசியா மணலை பயன்படுத்த வேண்டும்: தமிழிசை கருத்து

tamilisai-soundrajan-said-about-sand-quarries-judgement

மலேசியா மணல் இறக்குமதி செய்யப்பட்டு தேங்கி இருப்பதால், அதை பயன்படுத்த வேண்டும் என்பது சரியான நடவடிக்கை தான் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 6 மாதங்களுக்குள் அனைத்து மணல் குவாரிகளும் மூடப்பட வேண்டும் என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. அத்துடன் மேற்கொண்டு புதிதாக மணல் குவாரிகள் திறக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சட்டவிரோதமாக மணல் கடத்தப்படுவது தடுக்கப்பட வேண்டும் என்றும், இதற்காக கண்காணிப்பு குழு அமைக்கப்பட வேண்டும் என்றும், சட்டவிரோத மணல் விற்பனைக்கு துணை நிற்கும் அதிகாரிகள் உடனடியாக இடைநீக்கம் செய்யப்பட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை, “இயற்கை வளங்களை ‌பாதுகாக்கவும், மணல் கொள்ளையை ‌தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆற்று மணலுக்கு மாற்று என்ன என்பதை அரசு யோசித்திருக்க வேண்டும். நீதிமன்றத்தின் எந்த தீர்ப்பாக இருந்தாலும், அது கட்டுமானப் பணியையோ, மற்ற தொழில்களையோ, தொழிலாளர்களையோ, நாட்டின் முன்னேற்றத்தையோ பாதிக்கக்கூடாது என்பதில் அனைவருமே குறியாக இருக்க வேண்டும். மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட மணல் விநியோகிக்கவும் முடியாமல், அனுப்பவும் முடியாமல் ஒரே இடத்தில் தேங்கிக் கிடந்தது. அதனால் அந்த மணலை பயன்படுத்த வேண்டும் என்பது சரியான நடவடிக்கை தான்” என்று கூறினார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close