[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

மேலும் 2 தினகரன் அணி எம்பிக்கள் முதல்வர் அணிக்கு மாற்றம்

ttv-dhinakaran-side-mps-dindigul-udhayakumar-vellore-senguttuvan-changed-to-cm-palanisami-team

டிடிவி தினகரன் அணியில் இருந்து மேலும் இரண்டு அதிமுக எம்.பி.க்கள் முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு மாறியுள்ளனர்.

இரட்டை இலை சின்னம் மற்றும் அதிமுக அலுவலகம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணிக்கே என்று தேர்தல் ஆணையம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது. தீர்ப்பு வெளியான மறுநாளே ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. 

இதனையடுத்து தினகரன் அணியில் இருந்த விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன், நவநீதகிருஷ்ணன் ஆகிய 3 எம்.பி-க்கள் முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு நேற்று மாறினர். முதலமைச்சரின் இல்லத்தில் அவரை நேரில் சந்தித்து மூவரும் சேர்ந்தனர். ஆர்.கே.நகர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்த நிலையில், தினகரனுக்கு இது பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் தெரிவித்தனர். இருப்பினும், தன்னிடம் தெரிவித்துவிட்டே 3 எம்.பி.க்களும் அணி மாறியதாக தினகரன் கூறியிருந்தார்.

இந்நிலையில், தினகரன் அணியில் இருந்த திண்டுக்கல் உதயகுமார், வேலூர் செங்குட்டுவன் ஆகிய 2 எம்.பி.க்கள் இன்று முதல்வர் அணிக்கு மாறினர். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். 

இரட்டை இலை சின்னத்திற்கு மதிப்பளிக்கும் வகையில், தேர்தல் ஆணையத்தின் தீர்ப்பை மதித்து அணி மாறியுள்ளதாக திண்டுக்கல் உதயகுமார் கூறியுள்ளார். தினகரன் அணியில் மொத்தம் 6 எம்.பி.க்கள் இருந்தனர். இதுவரை நேற்றும் இன்றும் சேர்த்து 5 எம்.பி.க்கள் இதுவரை அணி மாறியுள்ளனர். கோவை எம்.பி. நாகராஜ் மட்டும் மீதமுள்ளார். கட்சித் தாவல் தடை சட்ட நடவடிக்கையை தவிர்க்கவே எம்பிக்கள் அணி மாறுவதாக கூறப்படுகிறது. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close