[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று மதியம் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மைய
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை மற்றும் புறநகர் பகுதியின் பல்வேறு இடங்களில் விடிய விடிய மழை

அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டம் ஒத்தி வைப்பு: ஆர்.கே.நகர் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம்

admk-governing-council-meet-postponned

நாளை நடைபெறுவதாக இருந்த அதிமுக ஆட்சி மன்றக் குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால் ஆர்.கே.நகரில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

ஆர்.கே.நகர் தொகுதிக்கு வரும் டிசம்பர் 21ஆம் தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டு மனுத்தாக்கலும் தொடங்கிவிட்டது. திமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மருது கணேஷ் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தினகரனும் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார். அதிமுக சார்பில் ஏற்கனவே போட்டியிட்ட மதுசூதனன் திரும்பவும் அறிவிக்கப்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. ஆனால், மதுசூதனனை வேட்பாளராக்க கட்சிக்குள் ஒருமித்த கருத்து இல்லை என்று பேசப்பட்டது. அதனை நிரூபிக்கும் வகையில் நேற்று நடைபெற்ற உயர்மட்ட கூட்டத்தில் போட்டியிடுபவர்கள் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அதிமுக அலுவலகத்தில் மதுசூதனன் அளித்தார். அவரை தொடர்ந்து பாலகங்கா, கோகுல இந்திரா உள்பட 20 பேர் விருப்ப மனு அளித்துள்ளனர்.

இந்நிலையில், நாளை நடைபெறுவதாக இருந்த ஆட்சி மன்றக் குழு ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூரில் நாளை எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாக் கூட்டம் நடைபெறுவதால் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்.கே.நகர் இடைத் தேர்தலுக்கான வேட்பாளரை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் உயர்மட்ட ஆலோசனைக் குழு கூட்டம் இன்று காலை முதல் நடைபெற்றது. ஆட்சிமன்றக் குழுவில் முதலமைச்சர் பழனிசாமி, வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி, பா.வளர்மதி ஆகியோரை சேர்ப்பது என்று முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே ஆட்சிமன்றக் குழுவில் ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன், ஜஸ்டின் செல்வராஜ், தமிழ்மகன் உசேன், பி.வேணுகோபால் ஆகியோர் உள்ளனர். மொத்தம் 9 பேர் கொண்ட புதிய ஆட்சி மன்றக் குழு அறிவிக்கப்பட்டது. ஆர்.கே.நகர் தேர்தலில் வேட்பாளரை தேர்வு செய்யும் அதிகாரம் இந்த ஆட்சி மன்றக் குழுவுக்கு உள்ளது. நவம்பர் 29-ம் தேதி ஆட்சி மன்றக் குழு ஒன்று கூடி வேட்பாளரை அறிவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மறுபடியும் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கூட்டம் எப்போது நடைபெறும் எனத் தெரிவிக்கப்படவில்லை. 

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close