[X] Close
JUST IN
 • BREAKING-NEWS டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெறுகிறது
 • BREAKING-NEWS சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா கல்யாண மண்டபத்தில் வரும் 26ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை ரசிகர்களை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்
 • BREAKING-NEWS இலங்கை சிறையில் இருந்து தமிழக மீனவர்கள் 16 பேர் முதற்கட்டமாக விடுதலை
 • BREAKING-NEWS ஒகி புயலால் கடலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 433 பேரை காணவில்லை: உள்துறை அமைச்சகம்
 • BREAKING-NEWS எம்.பி, எம்எல்ஏக்கள் மீதான புகார்களை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்க உச்சநீதிமன்றம் அனுமதி
 • BREAKING-NEWS ராஜஸ்தானில் சுட்டுக்கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனின் உடல் சென்னை வந்தது
 • BREAKING-NEWS திருச்செந்தூர் முருகன் கோயிலில் வள்ளி குகை அருகே பிரகார மண்டபம் இடிந்ததில் பெண் ஒருவர் பலி
 • BREAKING-NEWS ஜிஷா கொலை வழக்கில் குற்றவாளி அமிருல் இஸ்லாமிற்கு தூக்கு தண்டனை- எர்ணாகுளம் நீதிமன்றம்
 • BREAKING-NEWS ஜெ. மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் தீபக் ஆஜர்
 • BREAKING-NEWS விஏஓ தேர்விற்கு கன்னியாகுமரி மக்கள் விண்ணப்பிக்க காலநீட்டிப்பு செய்வது பற்றி பரிசீலிக்கப்படும் - அமைச்சர் ஜெயக்குமார்
 • BREAKING-NEWS ‘ஐஎன்எஸ் கல்வாரி’ என்ற நீர்மூழ்கிக் கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிப்பு
 • BREAKING-NEWS பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் குளிக்க 14 வது நாளாக தடை விதிப்பு
 • BREAKING-NEWS குஜராத் மாநிலத்தில் 2 வது மற்றும் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது
 • BREAKING-NEWS வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைக்க 2018 மார்ச் 31ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
அரசியல் 27 Nov, 2017 10:25 PM

தினகரன் ஆதரவு எம்பிக்கள் முதலமைச்சருக்கு ஆதரவு

ttv-dinakaran-mps-supported-the-edappadi-palanisamy

தினகரன் ஆதரவு எம்பிக்கள் மூன்று பேர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இரட்டை இலைச் சின்னம் இருக்குமிடத்தில்தான் தாங்கள் இருப்போம் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஜெயலலிதா நினைவு நாள் ஊர்வலம் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. அவரது க்ரீன்வேஸ் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தில், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்பி வேலுமணி, சி.வி.சண்முகம் ஆகிய அமைச்சர்களும் மூத்த தலைவர்கள் வைத்திலிங்கம், வளர்மதி, உள்ளிட்டோரும் பங்கேற்றனர். சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்களின் கட்சி நிர்வாகிகள் இந்த ஆலோசனைக்கூட்டத்தில், பங்கேற்றனர். ஆலோசனை நடந்து கொண்டிருந்தபோது கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர்களான நவநீத கிருஷ்ணன், விஜிலா சத்யானந்த், கோகுல கிருஷ்ணன் ஆகிய எம்பிக்கள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் ஆதரவை தெரிவித்தனர். இதுவரை டிடிவி தினகரன் அணியில் இருந்தவர்கள் முதலமைச்சருக்கு நேரில் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர்.

இது குறித்து கருத்துத் தெரிவித்த விஜலாசத்யானந்த் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் புதியதலைமுறையிடம் தொலைபேசி வழியில் பேசிய போது, இரட்டை இலைச்சின்னம் எங்கு இருக்கிறதோ அங்கு இருப்போம் என்று விளக்கமளித்தனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close