[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வணிக ஒத்துழைப்புக்கு நம்பிக்கைக்குரிய நாடு இந்தியா: கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
  • BREAKING-NEWS இந்தியாவில் அதிகரித்து வரும் எரிசக்தி தேவையை கனடா பூர்த்தி செய்யும் - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS முதல்வருடன் நட்பில் இருப்பதால் தொழில் தொடங்க விரும்புவோர் என்னை அணுகலாம் - ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
  • BREAKING-NEWS இரண்டு நாட்களில் முழுமையாக டவர்கள் சீர் செய்யப்பட்டு ஏர்செல் சேவை தொடங்கப்படும் - ஏர்செல் தென்னிந்திய தலைமை செயல் அதிகாரி சங்கர நாராயணன்
  • BREAKING-NEWS நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் இருவரின் நோக்கமும் மக்களுக்கு நல்லது செய்வதே - ரஜினிகாந்த்
  • BREAKING-NEWS ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர்களுடன் நடிகர் ரஜினிகாந்த் சந்திப்பு
  • BREAKING-NEWS டிடிவி தினகரனுடன் கள்ளக்குறிச்சி தொகுதி அதிமுக எம்எல்ஏ பிரபு திடீர் சந்திப்பு

இரட்டை இலை தனித்தனியாக பிரிந்துவிடும்: தமிழிசை விமர்சனம்

tamilisai-said-about-rk-nagar-and-admk

அதிமுகவில் இரண்டு இலைகளும் தனித்தனியாக பிரிந்து விடும் போல் உள்ளதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அதிமுக எம்.பி மைத்ரேயன், அதிமுகவின் இரு அணிகளும் இணைந்து 3 மாதங்கள் ஆகிவிட்டது, ஆனால் மனங்கள் இணையவில்லை என்று முகநூலில் கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, “ஆளும்கட்சிக்கு இரட்டை இலை இப்போதுதான் கிடைத்திருக்கிறது. அவ்வாறு கிடைத்தவுடனே இரண்டு இலையும் பிரிந்துவிடும் போலிருக்கிறது. ஏற்கனவே இரண்டு இலைகள் பிரிந்து இருந்து, பின்னர் இணைந்ததால் இரட்டை இலை தற்போது ஒன்றாக கிடைத்துள்ளது. ஆனால் நேற்றிலிருந்து வரும் செய்திகள், இரண்டு இலைகளும் ஒன்றொன்றாக பிரிந்துவிடுவார்கள் போல் இருக்கிறது என்ற யூகத்தை ஏற்படுத்தி வருகிறது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close