[X] Close
JUST IN
  • BREAKING-NEWS காரைக்கால் மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் கேசவன்
  • BREAKING-NEWS வேதாரண்யம் அருகே 35க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொலைத்தொடர்பு சேவைகள் முழுவதும் பாதிப்பு
  • BREAKING-NEWS கஜா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்ட வேதாரண்யம் தனித்தீவாக காட்சியளிக்கிறது
  • BREAKING-NEWS கஜா புயலின் தாக்கத்தால் ஏற்பட்ட விபத்துகளில் தமிழகத்தில் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆனது
  • BREAKING-NEWS 21 கி.மீ. வேகத்தில் நாகையை நெருங்கி வருகிறது கஜா புயல் - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS கடற்கரையில் உள்ளவர்களை கலைந்து செல்ல அறிவுறுத்துமாறு காவல்துறைக்கு பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவு
  • BREAKING-NEWS ‘கஜா புயல்’... முன்னெச்சரிக்கை அடிப்படையில் தேவையான நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளன; மக்கள் அச்சமடைய வேண்டாம் - பேரிடர் மேலாண்மைத் துறை

ஆர்.கே.நகரில் யாருக்கு ஆதரவு என டிசம்பர் 3ல் முடிவு: வைகோ

vaiko-about-rk-nagar-election

ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாருக்கு ஆதரவளிப்பது என்பதை, டிசம்பர் 3ம் தேதி நடைபெறவுள்ள உயர்நிலைக் குழு கூட்டத்தில் தான் முடிவெடுப்போம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். 

ஆர்.கே.நகர் தொகுதிக்கு டிசம்பர் 21ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இத்தேர்தலில் திமுக சார்பில் மருதுகணேஷ் போட்டியிடுகிறார். அவருக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது. அத்துடன் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, மதிமுக உயர்நிலைக் குழு டிசம்பர் 3ஆம் தேதி நடைபெறுகிறது என்று தெரிவித்தார். அந்த கூட்டத்தில் தான் ஆர்.கே நகர் தேர்தலில் யாருக்கும் ஆதரவு தெரிவிப்பதா அல்லது ஆதரவின்றி புறக்கணிப்பதா என்று முடிவெடுக்கப்படும் என்று கூறினார். அத்துடன் இடைத்தேர்தலில் போது பணப்பட்டுவாடா நடைபெறாமல் தேர்தல் ஆணையம் தடுக்க வேண்டும் என்றும், 1980ஆம் ஆண்டு முதலே பணப்பட்டுவாடா என்பது இடைத்தேர்தலில் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
 

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close