[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டெல்லியில் 28 ஆவது ஜிஎஸ்டி கூட்டம் அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் தொடங்கியது
  • BREAKING-NEWS இந்தியா திருக்கோயில் என்றால், கடவுள் இருக்கும் இடம் தமிழ்நாடு- முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நிதி மசோதாவுக்கு ஒப்புதல் பெறப்பட்டு நிறைவேற்றப்படும்- புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி
  • BREAKING-NEWS ராமநாதபுரம்: மண்டபம் அருகே முயல் தீவுப் பகுதியில் ரூ.4 கோடி மதிப்புள்ள கடல் அட்டைகள் பறிமுதல்
  • BREAKING-NEWS நாடு முழுவதும் அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் 2 ஆவது நாளாக லாரிகள் வேலைநிறுத்தம்
  • BREAKING-NEWS விருதுநகர்: ராஜபாளையம் அருகே திருவள்ளூர் நகரில் பாலியல் புகாரில் பள்ளி தலைமை ஆசிரியர் கைது

ஆர்.கே.நகர் தேர்தல்: 9 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழு நியமனம்

rk-nagar-byelection-monitoring-team-appointed

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கு 9 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது.

ஆர்.கே.நகருக்கு வரும் டிசம்பர் 21-ஆம் இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இடைத்தேர்தலில் பணப்பட்டுவாடாவைத் தடுக்கும் விதமாக மாலை 5 மணிமுதல் காலை 9 மணிவரை வீடுவீடாக பிரச்சாரம் செய்வதற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. இந்நிலையில் இடைத்தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்கு 9 பேர் கொண்ட பார்வையாளர்கள் குழுவை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. பொதுப் பார்வையாளர்கள், செலவின பார்வையாளர்கள் மற்றும் காவலர்கள் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தக் குழுவினர் டிசம்பர் 4-ஆம் தேதி தமிழகம் வரவுள்ள நிலையில், வேட்புமனு தாக்கல் நிறைவடைந்த பிறகு பார்வையாளர்கள் தங்கள் பணிகளைத் தொடங்கவுள்ளனர். தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதிலும் கண்காணிப்பதிலும் பொது பார்வையாளர்கள் ஈடுபடுவார்கள். வேட்பாளர்கள் மற்றும் கட்சிகளின் பரப்புரை மற்றும் தேர்தல் செலவுகளைக் கண்காணிப்பதில் செலவினப் பார்வையாளர்கள் கவனம் செலுத்தவுள்ளனர். தேர்தல் முறைகேடுகளைத் தடுப்பதில்
தடுப்பதில் காவல் பார்வையாளர்கள் பணியமர்த்தப்படுவதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேவைக்கேற்ப தேர்தல் வாக்குப்பதிவு நெருங்கும் தேதியில் கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close