முதலமைச்சர் பழனிசாமி அணிக்கு இரட்டை இலைச் சின்னத்தை ஒதுக்கி தேர்தல் ஆணையம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இரட்டை இலை சின்னம், கட்சியின் பெயர் ஆகியவற்றுக்கு முதல்வர் அணி, டிடிவி அணிக்கு உரிமை கோரிய வழக்கில் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 83 பக்கங்கள் கொண்ட அந்த தீர்ப்பில், அஇஅதிமுக என்ற பெயரை இனி முதலமைச்சர் அணி பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சின்னத்தை முடக்கி மார்ச் 22-ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது. அமைப்பு ரீதியாகவும், சட்டப்பேரவையிலும் முதல்வர் அணிக்கே அதிக ஆதரவு உள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
111 தமிழக எம்எல்ஏக்களின் ஆதரவு முதல்வர் அணிக்கு உள்ளதாகவும், தினகரன் அணிக்கு தகுதி நீக்கப்பட்ட 18 பேருடன் சேர்த்து 20 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளதாகவும் தேர்தல் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மக்களவையில் முதல்வர் அணிக்கு 34 உறுப்பினர்கள் ஆதரவும் தினகரன் அணிக்கு 3 உறுப்பினர்கள் ஆதரவும் உள்ளதாக தேர்தல் ஆணையம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் முதல்வர் அணிக்கு 8 உறுப்பினர்களும் தினகரன் அணிக்கு 3 உறுப்பினர்கள் ஆதரவும் இருப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
ஆதரவாளர்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.
சாதிக் அலி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையிலேயே முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சட்டப்பேரவை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடிப்படையில் சாதிக் அலி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது. சமாஜ்வாதி, ஐக்கிய ஜனதா தள கட்சிகளில் ஏற்பட்ட பிரச்னைகளுக்கு இதே முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஆணையம் சுட்டிக்காட்டியுள்ளது. கட்சியின் பொதுக் குழுவையே தொண்டர்களின் பிரதிநிதிகளின் கருத்தாக எடுக்க முடியும் எனவும் தேர்தல் ஆணையம் கூறியிருக்கிறது. பிரமாணபத்திரம் தொடர்பான டிடிவி தினகரன் அணியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனவும் லட்சக்கணக்கான தொண்டர்கள் இருப்பதால், அவர்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்த முடியாது என்றும் தேர்தல் ஆணையம் 83 பக்கத் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைய தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்:
1. அஇஅதிமுக என்ற பெயரை இனி முதலமைச்சர் அணி பயன்படுத்தலாம்
2. சின்னத்தை முடக்கி மார்ச் 22ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு வாபஸ்
3. அமைப்பு ரீதியாகவும், சட்டப்பேரவையிலும் முதல்வர் அணிக்கே அதிக ஆதரவு
4. 111 தமிழக எம்எல்ஏக்களின் ஆதரவு முதல்வர் அணிக்கு உள்ளது
5. தினகரன் அணிக்கு தகுதி நீக்கப்பட்ட 18 பேருடன் சேர்த்து 20 எம்எல்ஏக்கள் ஆதரவு உள்ளது
6. மக்களவையில் முதல்வர் அணிக்கு 34, தினகரன் அணிக்கு 3 உறுப்பினர்கள் ஆதரவு
7. மாநிலங்களவையில் முதல்வர் அணிக்கு 8, தினகரன் அணிக்கு 3 உறுப்பினர்கள் ஆதரவு
8. கட்சியின் பொதுக்குழுவையே தொண்டர்களின் பிரதிநிதிகளின் கருத்தாக எடுக்க முடியும்
9. பிரமாண பத்திரம் தொடர்பான டிடிவி தினகரன் அணியின் குற்றச்சாட்டில் உண்மை இல்லை
10. லட்சக்கணக்கான தொண்டர்கள் இருப்பதால், அவர்களிடம் பொதுவாக்கெடுப்பு நடத்த முடியாது
விஷ சாராயம் குடித்து 32 பேர் உயிரிழப்பு - அசாமில் சோகம்
கடுமையான வறுமையிலும் படித்து டிஎஸ்பி ஆன சரோஜா
‘கிஷான் மார்ச் 2.0’ - மும்பையை நோக்கி விவசாயிகள் மீண்டும் பேரணி
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி - சொந்த சின்னத்தில் போட்டி
உலகளவில் முதலிடம் பிடிக்கபோகும் இந்திய மக்களவை தேர்தல் 2019