[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிடுவதை நிறுத்தியது ரிசர்வ் வங்கி
  • BREAKING-NEWS ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சை பேச்சு.. சீமான் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தல் களத்தில் நேருக்கு நேர் மோதத் தயாரா..? முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
  • BREAKING-NEWS பிசிசிஐ தலைவராகிறார் கங்குலி... அனைத்து மாநில சங்கங்கள் ஏகமனதாக தேர்வு செய்கின்றனர்.
  • BREAKING-NEWS திருச்சி லலிதா ஜூவல்லரி நகைக் கொள்ளை வழக்கில் மேலும் 6 கிலோ நகை சிக்கியது
  • BREAKING-NEWS அயோத்தியில் டிசம்பர் 10-ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு

மோடியும்... டீ கடையும்... சர்ச்சைக்குள்ளான மீம்ஸ்!

modi-tea-shop-controversial-memes

பிரதமர் நரேந்திர மோடியை டீக்கடைக்காரர் என்று குறிப்பிடும்படி வெளியான மீம்ஸ் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலின் போது பாரதிய ஜனதா கட்சி சார்பில் நரேந்திர மோடி பிரதமர் பதவிக்கு நிறுத்தப்பட்டார். அப்போது நடைபெற்ற பிரச்சாரத்தின்போது காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர், மோடியால் ஒருபோதும் பிரதமர் ஆக முடியாது, வேண்டுமென்றால் அவருக்கு டீ விற்பதற்காக இடம் ஒதுக்கி தருவதாக தெரிவித்திருந்தார். அவரின் இத்தகைய பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இருப்பினும் அந்த தேர்தலில் மோடி வெற்றி பெற்று இந்தியாவின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதனைத்தொடர்ந்து காங்கிரஸ் துணைதலைவர் ராகுல் காந்தி, பாஜக உட்பட அனைத்து கட்சி தலைவர்களையும் நாகரீகமான முறையில் விமர்சிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அகில இந்திய இளைஞர் காங்கிரஸின் ஆன்லைனின் ஊடகமான யுவ தேஸின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி குறித்த மீம்ஸ் ஒன்று பதிவிடப்பட்டது. இதில் இங்கிலாந்து பிரதமர் தெரசா மே மற்றும் டொனால்ட் ட்ரம்ப் ஆகியோர் பிரதமர் மோடியை டீ விற்க செல்லுமாறு கூறுவது போல் சித்தரிக்கப்பட்டுள்ளது. பலரின் விமர்சனத்திற்கு உள்ளான இந்த மீம்ஸ் அந்த பக்கத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. அதேபோல் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இந்த மீம்ஸ்க்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் அவர்களிடம், யுவ தேஸ் நிர்வாகிகள் பகிரங்கமாக மன்னிப்பு கோரியுள்ளனர்.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close