[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS ஸ்டாலின் கனவில் வேண்டுமானால் முதலமைச்சராகலாம், எந்தக்காலத்திலும் முதல்வராக முடியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS சசிகலாவிற்கு விதியை மீறி சிறப்பு வசதிகள் செய்து கொடுத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் - பெங்களூரு சிறைத்துறை டிஐஜியாக பதவி வகித்த ரூபா ஐபிஎஸ் புதிய தலைமுறைக்கு பேட்டி
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 73.65 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ. 69.14 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS கேக்குறவன் கேனப்பயலா இருந்தா எறும்பு ஏரோப்பிலேன் ஓட்டுது என்று சொல்வார்களாம்; அதுபோல் இருக்கிறது கோடநாடு விவகாரத்தில் என்னை தொடர்புபடுத்துவது - முதல்வர் எடப்பாடி பழனிசாமி
  • BREAKING-NEWS மக்களவை தேர்தல் தேதியை மார்ச் முதல் வாரத்தில் தேர்தல் ஆணையம் அறிவிக்க வாய்ப்பு என தகவல்; மக்களவை தேர்தல் 6 அல்லது 7 கட்டங்களாக நடைபெற வாய்ப்புள்ளதாகவும் தகவல்
  • BREAKING-NEWS கோடநாடு விவகாரத்தில் சயான், மனோஜ் இருவரும் பிணைத் தொகையை செலுத்தியதை தொடர்ந்து ஜாமீன் வழங்கப்பட்டது

போயஸ் கார்டன் ரெய்டில் சதி இருக்கிறது: டிடிவி தினகரன்

ttv-dhinakaran-remarks-about-poes-garden-raid

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியதில் சதி இருப்பதாக அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன் குற்றம்சாட்டியுள்ளார்.

தமிழகத்தின் அதிகார பீடமாக இருந்த ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் நேற்றிரவு சோதனை நடத்தினர். நள்ளிரவு 2 மணி வரை நடைபெற்ற சோதனையில் லேப்டாப், 2 பென் டிரைவ் ஆகியவற்றை வருமான வரித்துறை அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் இதுகுறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய டிடிவி தினகரன், "சேகர் ரெட்டி வீட்டில் இருந்தது போல் ஜெயலலிதா அறையில் வைர நகைகளோ, தங்க குவியலோ இல்லை. கார்டனில் இருந்து பாழாகிப்போன 2 லேப்டாப்புகளையே கைப்பற்றியுள்ளனர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, அவரது நண்பர் என்று சொல்லும் பிரதமர் மோடி நேரில் வந்து சந்திக்கவில்லை. அதை நாங்கள் அன்று அரசியலாக பார்க்கவில்லை. சமீபத்தில் கருணாநிதியை
பிரதமர் மோடி சந்தித்ததை கூட அரசியலாக கருதவில்லை. ஆனால் இன்று ஜெயலலிதா வீட்டில் சோதனை நடத்தப்பட்டதில் சதி இருக்கிறது. அரசியல் உள்நோக்கமும் இருக்கிறது. ஜெயலலிதா இருக்கும் திசை நோக்கி வணங்குகிறேன் என்றவர்கள் யாரும் அங்கு செல்லவில்லை. இந்த சோதனைக்கு எல்லாம் அஞ்சமாட்டேன். இருப்பது ஒரு உயிர். போவது ஒருமுறை. இருக்கும்வரை வீரனாகத் தான் போராடுவோம். 1996-ல் நரசிம்ம ராவ், எங்கள் மீது பல்வேறு
ஏவுகணைகளை ஏவினார். ஆனால் இன்று அவர் காங்கிரஸில் இருப்பது தெரியாமலே போய்விட்டது. அதிகார துஷ்பிரயோகம் செய்வதால் யார் வீட்டில் வேண்டுமானாலும் சோதனை நடத்தலாம். ஆனால் சோதனை நடைபெற்றதற்காகவே யாரையும் குற்றவாளி என சொல்லிவிட முடியாது. ரெய்டுக்கு காரணமானவர்கள், அதனை அனுமதிப்பவர்கள் நிச்சயம் காலத்திற்கு பதில் சொல்லித்தான் ஆக வேண்டும். வருமான வரித்துறை யார் கையில் இருக்கிறோ அவர்கள் தான் இந்த சதி வேலையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு இயக்கத்தை அழித்துவிட்டு தாங்கள் வளரலாம் என நினைப்பவர்கள் நிச்சயம் அழிந்துபோவார்கள். குறிப்பாக தமிழக மக்கள் என்றும் நல்லவர்கள் பக்கம் தான் நிற்பார்கள் என்பதை வருங்காலம் உணர்த்தும்" என டிடிவி தினகரன் தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close