[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவின் முதல் கூட்டம் சென்னையில் செப்.24ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது
  • BREAKING-NEWS மகாத்மா காந்தியின் 150ஆவது பிறந்தநாள் விழா லோகோவை டெல்லியில் வெளியிட்டார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் நிபுணர் குழுவின் ஆய்வை ஒத்திவைக்க வேண்டும் என மத்திய மாசுக் கட்டுப்பாடு வாரியத்திற்கு தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் கடிதம்
  • BREAKING-NEWS பாஜக அரசால்தான் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாகும் - அமித்ஷா
  • BREAKING-NEWS சுதந்திர இந்தியாவில் முதல் பெண் ஐஏஎஸ் அதிகாரி காலமானார்
  • BREAKING-NEWS சென்னையில் ஆட்டோ, ஷேர் ஆட்டோ கட்டணம் உயர்வு
  • BREAKING-NEWS புழல் சிறையில் வார்டன்கள் அதிரடி இடமாற்றம்

ஆளுநரின் தலையீட்டை ஜெயலலிதா ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்: தினகரன்

jayalalithaa-would-not-allow-governor-interfer-in-administration-ttv-dhinakaran

மாநில அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடுவதாகவும், ஜெயலலிதா ஒருபோதும் இதுபோன்ற செயல்பாடுகளை அனுமதித்திருக்க மாட்டார் எனவும் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். 

கோவைக்கு, இரண்டு நாள் பயணமாக சென்றுள்ள தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், அரசு அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சிப் பிரமுகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.  இது, மாநில உரிமைகளைப் பறிக்கும் செயல் என திமுக, மதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருகின்றன. 

இந்நிலையில், அதிமுக அம்மா அணியின் துணைப் பொதுச்செயலாளர் தினகரனும் அதிகாரிகளுடனான ஆளுநரின் சந்திப்பை விமர்சித்துள்ளார். இதுபோன்ற செயல்பாடுகளை ஜெயலலிதா ஒருபோதும் அனுமதித்திருக்க மாட்டார் என்று கூறிய டிடிவி தினகரன், மாநில சுயாட்சியை எல்லா நிலைகளிலும் உறுதிப்படுத்துவதே அதிமுகவின் கொள்கை என்றும் தெரிவித்துள்ளார்.

டெல்லி மற்றும் புதுச்சேரியில் துணைநிலை ஆளுநரின் தலையீட்டால் நிர்வாகம் ஸ்தம்பித்திருப்பது போன்ற நிலை தமிழகத்திற்கும் வரலாம் என்று அவர் கூறியுள்ளார். மேலும், அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிராக அரசு அதிகாரத்தில் ஊடுறுவும் நடவடிக்கையாக பாரதிய ஜனதா அரசு இதை செய்து வருவதாக விமர்சித்துள்ளார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close