[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

உள்ளாட்சி தேர்தலை ஏன் நடத்தவில்லை: தேர்தல் ஆணையம் விளக்கம்

tn-state-election-commission-explain-why-did-not-announce-election-date-in-high-court

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கக் கோரும் வழக்கில் தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது. 

செப்டம்பர் 18ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிட  வேண்டுமெனவும், நவம்பர் 17ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க வேண்டுமெனவும் சென்னை உயர்நீதிமன்றம் செப்டம்பர் 4ம் தேதி உத்தரவிட்டது. ஆனால், செப்டம்பர் 18-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிடவில்லை. இதனால்,  தேர்தல் அறிவிப்பை வெளியிடாத மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசுக்கு எதிராக  திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார்.

அதை விசாரித்த தலைமை நீதிபதி இந்திராபானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் அமர்வு மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான், செயலாளர் ராஜசேகர் ஆகியோர் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க உத்தரவிட்டனர். இதையடுத்து அவர்கள் நேற்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்கள். அப்போது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கிலிருந்து தங்களை விடுவிக்க கோரி மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ் கான், செயலாளர்  ராஜசேகர் ஆகியோர் மனுத்தாக்கல் செய்தனர். அதில் நேரில் ஆஜராவதில் இருந்து விளக்கு அளிக்க கோரி இருந்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் விசாரணை இன்று நடைபெற்றது. விசாரணையின் போது, உள்ளாட்சி அமைப்புக்காக சட்ட உட்பிரிவுகளை அரசு திரும்பப் பெற்றதால் தேர்தலை நடத்த முடியவில்லை என்று  தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், மாநில தேர்தல் ஆணைய அதிகாரிகள் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை முன் வைக்கப்பட்டது. இதனையடுத்து, தேர்தல் ஆணைய அதிகாரிகள் நேரில் ஆஜராவதில் இருந்து உயர்நீதிமன்றம் விலக்கு அளித்தது.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close