அதிமுகவை சார்ந்த மூத்த தலைவரும், மக்களவை துணை சபாநாயகருமான தம்பிதுரையை தனது ட்விட்டர் பக்கத்தில் எஸ்.வி.சேகர் கடுமையாக கிண்டல் அடித்திருக்கிறார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக அமைச்சர்கள் தனக்கு தோன்றியதை எல்லாம் பேசி வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். இன்று பேசியதை நாளை இல்லை என மறுப்பதும் நேற்று பேசியதை இன்றைக்கு மாற்றி பேசுவதும் அவர்களுக்கு இயல்பான விஷயமாக மாறியுள்ளது. அதன் ஒரு பகுதியாக “ஜெயலலிதா எதிர்ப்பின் காரணமாகவே இப்போது மத்திய அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது” என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேற்று விமான நிலையத்தில் பேட்டி அளித்திருந்தார். அவர் மறைந்து ஒரு வருட காலம் நிறைவடைந்துள்ள நிலையில் இவரது இந்தக் கருத்தை பலரும் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகின்றனர்.
இதனை கிண்டலடிக்கும் விதத்தில் பாஜகவை சார்ந்த எஸ்.வி.சேகர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இவர்களை இத்தனை வருஷம் பேச விடாம காலடியிலேயே மூக்கு தரையில் நசுங்குகின்ற அளவுக்கு ஏன் வைத்திருந்தார்கள் என்று இப்பதான் புரிகிறது. இந்த ஆண்டின் நகைச்சுவையும் உச்ச கட்ட உளரலும் இதுதான். நாக்கில் சனி நடனமாடுகிறார்” என்று விமர்சித்திருக்கிறார்.
முள்காட்டில் வீசப்பட்ட குழந்தையை நாய்கள் தின்ற அவலம்
ஆசிஃபா பற்றி பேசியதால் மாணவி இடைநீக்கம்: மனம் மாறிய கல்லூரி நிர்வாகம்
தீபக் மிஸ்ராவை தகுதி நீக்க என்ன செய்ய வேண்டும் ? சட்டம் சொல்வது என்ன ?
40 ஆண்டுகளுக்குப் பின் யூடியூப் உதவியால் ஒன்று சேர்ந்தக் குடும்பம்!
சிபிஎஸ்இ குழந்தைகளுக்கு வீட்டுப்பாடம் இல்லை
கடுகு டப்பாவும், பேங்க் டெபாசிட்டும் ! பெண்களுக்கு சில டிப்ஸ்
அதிகரித்த ஏடிஎம் பணத் தட்டுப்பாடு.. பதுக்கலா..? ஒரு பார்வை..!
நாடாளுமன்றம், சட்டசபைக்கு ஒரே நேரத்தில் தேர்தல்: கருத்து கேட்கும் ஆணையம்
11 ஆண்டுகளுக்கு தங்கத்தின் விலை ஏறிக்கொண்டேதான் இருக்கும்: எக்ஸ்பெர்ட் டிப்ஸ்
தீண்டாமைக்கு சம்மட்டி அடி ! தலித் பக்தரை தோளில் சுமந்துச் சென்ற அர்ச்சகர்