[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து 2124 டன் கந்த அமிலம் அகற்றம்
  • BREAKING-NEWS அரசின் எந்த துறையையும் ஆளுநர் விமர்சித்தது இல்லை: ஆளுநர் மாளிகை விளக்கம்
  • BREAKING-NEWS கர்நாடக முதல்வர் அழுது புலம்பினாலும் செல்லாது - அமைச்சர் ஜெயக்குமார்
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்

நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு: பிரகாஷ்ராஜ்

actor-prakash-raj-angry-speech

திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.

நடிகராக மட்டுமில்லாமல் அவ்வப்போது சமூக பிரச்னைகள் குறித்தும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு சமூக அக்கறையை வெளிப்படுத்தி வருபவர் நடிகர் பிரகாஷ்ராஜ். பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை தொடர்பாக பிரதமர் மோடியை கடுமையாக சாடிய அவர் மீது லக்னோ நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் தொடரப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் அரசியலுக்கு வருகிறாரா என்றும் பரவலாக பேசப்பட்டது.

இந்நிலையில் திரைப்பட நடிகர்கள் அரசியல் தலைவர்களானால் நாட்டிற்கு பேரழிவு என நடிகர் பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இதனைத் தெரிவித்தார். நடிகர்கள் அரசியலுக்கு வருவதை தான் விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ள அவர், தான் எந்த அரசியல் கட்சியிலும் சேரப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார். அரசியலுக்கு நான் நிச்சயமாக வருவேன் என நடிகர் கமல்ஹாசன் உறுதியாக தெரிவித்து அதற்கான வேலைகளில் இறங்கியுள்ளார். இந்நிலையில் நடிகர் பிரகாஷ்ராஜ் கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close