[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இருசக்கர வாகனத்தை ஓட்டுபவருடன் பின்னால் அமர்ந்து செல்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்- உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஹெல்மெட் கட்டாயம் என்பதை அமல்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS இருசக்கர வாகனங்களை விற்கும் நிறுவனங்களே ஹெல்மெட்டையும் இலவசமாக வழங்க வேண்டும்- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS வாகன ஆய்வாளர் வங்கி லாக்கரில் 9.5 கிலோ தங்கம் பறிமுதல்
  • BREAKING-NEWS சென்னை, கடலூர், நாகை துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.48 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.10 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS திமுகவுக்கு எதிராக வரும் 25ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் - முதல்வர் பழனிசாமி

நான் காந்தி பேரன் இல்லை: டிடிவி தினகரன்

ttv-dinakaran-react-about-it-raid

தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் வருமான வரி சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டது என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் அவரது உறவினர்கள் என சுமார் 187 இடங்களில்  மூன்று நாட்களாக வருமான வரித் துறை சோதனை நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரன், தமக்கு ‌ஆதரவு அளித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் கூறும்போது, ‘1800 பேரை வைத்து மெகா வருமான வரி சோதனை நடத்தப்பட வேண்டியதன் அவசியம் என்ன? புதுச்சேரியில் தனது பண்ணை வீட்டில் பாதாள அறைகள் இருப்பதாக வெளியான செய்தியில் உண்மையில்லை. நான் தூய்மையானவன் என்பதை என்னால் கூற இயலும், எனது உறவினர்கள் குறித்து கூற இயலாது. நான் காந்தியின் பேரன் ‌அல்ல, என் மீது குற்றம் சுமத்துவர்கள் காந்தியின் பேரன்களா?‌ வருமான வரித்துறை கைப்பற்றும் பணம் எல்லாம் கணக்கில் காட்டப்படாதது அல்ல. இந்தச் சோதனையை யாரும் எதிர்க்கவில்லை. உள்நோக்கம் கொண்டது என்று தான் கூறுகிறோம்' என்றார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close