[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

மம்தா பானர்ஜியை இன்று சந்திக்கிறார் கமல்ஹாசன்

kamal-hassan-to-meet-mamata-banerjee-today

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை சந்திப்பதற்காக நடிகர் கமல்ஹாசன் கொல்கத்தா புறப்பட்டுச் சென்றுள்ளார்.

கொல்கத்தாவில் சர்வதேச திரைப்பட திருவிழா இன்று முதல் வரும் 17-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் ஏராளமான பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்கின்றனர். விழாவில் கலந்து கொள்வதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று மாலை சர்வதேச திரைப்பட தொடக்க விழாவில் பங்கேற்ற பின் இன்று இரவே மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை கமல்ஹாசன் சந்திக்கிறார்.

இந்த சந்திப்பு அரசியல் ரீதியான சந்திப்பாக இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. நான் அரசியலுக்கு நிச்சயமாக வருவேன் என கமல்ஹாசன் உறுதியாக தெரிவித்திருக்கிறார். அத்தோடு மட்டுமில்லாமல், கேளராவிற்கு சென்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயனிடமும் அரசியல் தொடர்பாக ஆலோசனை நடத்திய கமல்ஹசான், சென்னை வந்த டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியை
இன்று சந்திக்க உள்ளது அரசியலில் கமல்ஹாசன் தீவிரமாக இறங்கியுள்ளார் என்பதை தெளிவாக காட்டுகிறது.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close