[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது
  • BREAKING-NEWS ஆதார் செல்லுமா ? செல்லாதா ? என்பது குறித்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு நாளை தீர்ப்பளிக்கிறது
  • BREAKING-NEWS சிலை கடத்தல் வழக்குகளை விசாரிக்க சிபிஐ மறுத்தது குறித்து பதிலளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
  • BREAKING-NEWS விநாயகர் சிலை ஊர்வலத்தில் பேசியதை நீதிமன்றம் தாமாக முன் வந்து விசாரிக்க ஹெச்.ராஜா எதிர்ப்பு
  • BREAKING-NEWS தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
  • BREAKING-NEWS உலகின் சிறந்த கால்பந்து வீரராக லூகா மோட்ரிச் தேர்வு
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.86.13 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.78.36 காசுகளாகவும் விலை நிர்யம்

வருமான வரித்துறை மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்: ஜி.கே.வாசன்

income-tax-officers-should-explain-about-raid-gk-vasan

வருமான வரித்துறையினரின் சோதனை குறித்து காலம் தாழ்த்தாமல் மக்களுக்கு அத்துறை சார்பில் விளக்கம் தர வேண்டும் என தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

சசிகலாவின் உறவினர்கள் இல்லத்தில் நடைபெற்று வரும் வருமான வரிசோதனை குறித்து கருத்து தெரிவித்த வாசன், மத்திய அரசும், வருமான வரித்துறையும் நேர்மையாக செயல்படுகிறது என்றால், சோதனைக்குப் பிறகு விளக்கம் அளிக்க வேண்டும் என்று கூறினார். மேலும் பேசிய அவர், " இதுபோன்ற வருமான வரித்துறை சோதனைகள் நடைபெறும் போது பலமுறை சந்தேகங்கள் எழுகிறது. எனவே சோதனை குறித்து காலம் தாழ்த்தாமல் அத்துறையினர் மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் சோதனை மீது சந்தேகம் எழுந்தால், அது குறித்து தெளிவுபடுத்த வேண்டியது அத்துறையினரின் கடமை. தமிழக அரசியல் நிலை எப்படி சென்று கொண்டிருக்கிறது என்பது எல்லோருக்கும் தெரியும். இப்படிப்பட்ட சூழலில் உண்மை நிலை வெளியே வர வேண்டும் என்பது தான் மக்களின் விருப்பமாக இருக்க முடியும்" என தெரிவித்தார்.

வீடியோ

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close