[X] Close
JUST IN
  • BREAKING-NEWS டாஸ் வென்றது வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா முதல் பேட்டிங்
  • BREAKING-NEWS நான் மிரட்டவில்லை, பொய் புகார் கொடுத்துள்ளனர் - பிக்பாஸ் மதுமிதா
  • BREAKING-NEWS ப.சிதம்பரத்தை ஆக.26 வரை காவலில் விசாரிக்க சிபிஐ-க்கு அனுமதி

இருவரின் உயிரிழப்புக்கு ஜெயலலிதா இரங்கல்

jaya-condoles-party-cadres-death-in-yesterday-rally

அதிமுக தேர்தல் பரப்புரை கூட்டத்தில் கலந்துகொண்டு உடல்நலக் குறைவால் உயிரிழந்த இருவருக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், விருத்தாசலத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட, சிதம்பரம் நகரின் 31ஆவது வார்டு உறுப்பினர் கருணாகரன் என்பவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ‌னைக்கு கொண்டு செல்லும்போது மரணமடைந்துவிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பின்னர், வீடு திரும்பும் வழியில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் கொண்டு செல்லும்போது மரணமடைந்த செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்துள்ளதாக ஜெயலலிதா தெரிவித்துள்ள‌ர்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close