[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சமூகத்தின் மிகப்பெரிய பிரச்னை சாதி; நாட்டில் இன்னும் சாதி வேற்றுமை உள்ளது - ப.சிதம்பரம்
  • BREAKING-NEWS பாஜகவின் பலத்தை எதிர்க்கட்சிகளால் எதிர்கொள்ள முடியாது- தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS மாநில உரிமைகளில் ஆளுநர் தொடர்ந்து தலையிடுவதை பொறுத்துக்கொள்ள முடியாது- மு.க.ஸ்டாலின்
  • BREAKING-NEWS மதுரையில் அமைக்கப்பட உள்ள் எய்ம்ஸ் போல் மேலும் ஒரு எய்ம்ஸ் வந்தாலும் நல்லதுதான் - டிடிவி தினகரன்
  • BREAKING-NEWS பிரதமர் மோடி கூட்டாட்சி தத்துவத்தை மறந்துவிட்டார்- புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி

பிரதமர் மோடிக்கு மு.க.அழகிரி கடிதம்

alagiri-thanks-letter-to-pm-modi

திமுக தலைவரும், தனது தந்தையுமான கருணாநிதியை சந்தித்து உடல்நலம் விசாரித்ததற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு, முன்னாள் மத்திய அமைச்சர் மு.க. அழகிரி நன்றி தெரிவித்துள்ளார். 

இது குறித்து பிரதமருக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், தன் பெற்றோரை சந்தித்தற்கு தனிப்பட்ட முறையில் நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார். அவர்களது உடல்நலத்தில் பிரதமர் கொண்டுள்ள அக்கறை குறித்து தான் நெகிழ்ச்சி அடைந்ததாகவும் அழகிரி கூறியுள்ளார். 

பிரதமர், கருணாநிதியை சந்திக்க வருவது தனக்கு தெரியாததால் பிரதமரை வரவேற்க வர இயலவில்லை என்றும் மு.க. அழகிரி தெரிவித்துள்ளார். பிரதமர் வந்து பார்த்ததும், டெல்லிக்கு வந்து தனது வீட்டில் தங்குமாறு அழைப்பு விடுத்ததும், அவர்களது உடல்நிலை மேலும் முன்னேற்றமடைய உதவும் என்றும் அழகிரி குறிப்பிட்டுள்ளார். நாட்டின் முன்னேற்றத்திற்காக பாடுபடுவதற்காக பிரதமர் மோடிக்கு தனது பாராட்டுதல்களை தெரிவித்துக் கொள்வதாகவும் அழகிரி கூறியிருக்கிறார்.

வீடியோ

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close